இயேசு வருகிறார்.. கத்திக் கொண்டே 16 மாத குழந்தையை கொடூரமாக குத்தி கொன்ற தந்தை!
16 மாத குழந்தையை கொடூரமாக பெத்த தகப்பனே கொலை செய்தார்.
அமெரிக்கா: பெத்த குழந்தையை கத்தியால் குத்தி குத்தி கொல்ல ஒரு தகப்பனுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ தெரியவில்லை.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார் இந்த கொடூர தகப்பன். இவருக்கு 16 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் அக்குழந்தையை, தந்தை சரசரவென கழுத்தை அறுத்துள்ளார்.

துடிக்க துடிக்க கொலை
பிறகு குழந்தையின் உடலெங்கும் கத்தியால் குத்தி குத்தி கொன்றுள்ளார். குழந்தையின் அலறல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர் என்ன சத்தம் என்று பார்க்க கையில் துப்பாக்கியுடன் ஓடிவந்தார். அப்போது குழந்தையை, தகப்பனே துடிக்க துடிக்க கொன்று கொண்டிருந்தது தெரியவந்தது.

காலில் சுட்டார்
இதையடுத்து அந்த குழந்தையை மேலும் கத்தியால் குத்தாமல் இருக்க, பக்கத்து வீட்டுக்காரர் தன் துப்பாக்கியால் தந்தையின் காலில் சுட்டார். உடனே கத்தியுடன் அவர் கீழே மயக்கமடைந்து விழுந்தார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் குற்றுயிரும் குலையிருமாக கிடந்த குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி கொண்டு ஓடினர். ஆனால் பலன் இல்லை. குழந்தை தந்தை கத்தியால் குத்தும்போதே இறந்துவிட்டிருக்கிறது.

இயேசு வருகிறார்
குழந்தையை தந்தை கொல்வதை பற்றி பக்கத்து வீட்டுக்காரர் சொல்லும்போது, கொலையாளி ‘இயேசு வருகிறார்', இயேசு வருகிறார் என்று சத்தமாகக் கத்திக் கொண்டே கத்தியால் குத்தியதாக கூறுகிறார். காலில் சுட்டதற்காக போலீசார் பக்கத்து வீட்டுக்காரர் மீது எந்தவொரு குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை என தெரிகிறது. கடைசியில் அந்த வினோத தகப்பன் கைது செய்யப்பட்டுள்ளார்.
|
இப்படியும் ஒரு தகப்பனா?
எத்தனையோ பேர் நாட்டில் குழந்தை பாக்கியம் இன்றி தவிக்கின்றனர். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளாகி பலர் தற்கொலையே செய்து கொண்டு வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இப்படி கோரமாகவும், கொடூரமாகவும் கொலை செய்தவர் மனநோயாளியா, அல்லது வேறு ஏதேனும் வெறிபிடித்த மிருகமாக என தெரியவில்லை. ஆனால் குழந்தை இறந்தவிதத்தை நினைத்தாலே அதை ஜீரணிக்கவே முடியவில்லை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications