விமானம் தரையிறங்கும் நேரத்தில் ஓடுபாதையில் போதையில் காரை ஓட்டி சென்ற நபர்.. வைரல் வீடியோ!

Subscribe to Oneindia Tamil

பாங்காங்: போதை அதிகமாகிவிட்டால் கண் முன்னே தெரிவதை பற்றி யோசிக்காமல் நிதானம் இழந்து நடந்து கொள்வது தான் மனிதனின் இயல்பு. அப்படி நடந்த தவறுகளால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு பேரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.

எத்தனையோ அப்பாவி உயிர்கள் பலியாக இந்த மது போதை காரணமாக இருக்கிறது. ஏன் மது போதை தான் நாட்டில் உள்ள பெரும்பாலான ஏழை மக்களை நசுக்கி ரத்தத்தை உறிஞ்சி வருகிறது,

சரி விஷயத்துக்கு வந்துவிடுவோம். கடந்த ஜனவரி 14, 2021 அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில் ஒருவர் குடிபோதையில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானம் தரையிறங்கும் நேரத்தில் காரை ஓட்டிச் சென்றார். இந்த விவகாரம் விமான நிலைய அதிகாரிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

தாய்லாந்து

தாய்லாந்து

தாய்லாந்தின் தலைநகர் பாங்காக் உலகின் டாப்10 புகழ் பெற்ற சர்வதேச சுற்றுலா தளங்களில் ஒன்றாகும். இங்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான சர்வதேச சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் குடிபோதையில் மர்ம நபர் ஒருவர் பலத்த பாதுகாப்புகளையும் மீறி விமான நிலைய ஓடுபாதையில் காரை ஓட்டிச் சென்றுள்ளார்.

பறிமுதல்

கோங்ஸாக் என்பவர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள வீடியோவில், காரை ஓட்டி வந்த நபர் எவ்வித சேதத்தையும் ஏற்படுத்தும் முன்பு போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்துவிட்டனர். காரையும் உடனடியாக பறிமுதல் செய்துவிட்டனர்.

போதைப்பொருள்

போதைப்பொருள்

கைது செய்யப்பட்ட நபரின் காரில் இருந்து மதுபாட்டில், போதைப்பொருளையும் விமான பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றி உள்ளார்கள். விமான நிலையத்தின் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் நுழைந்தல், சட்டவிரோதமாக போதைப்பொருள் வைத்திருத்தல், மற்றும் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் போதை ஆசாமியை கைது செய்துள்ளனர்.

காதலுக்காக

காதலுக்காக

இப்படி போதை ஆசாமி விமான நிலைய ஓடுபாதையில காரை ஒட்டி உள்ளே வருது முதல்முறை அல்ல. 2016 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் குடிபோதையில் இருந்த நபர், ஒருவர் காதலுக்காக உள்ளே புகுந்தார். அவரை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+