“சும்மா” தூங்கினால் நிறைய சந்தோஷம் கிடைக்குமாம்!
லண்டன்: திருமண வாழ்க்கையில் ஒரு தம்பதி சந்தோஷமாக இருக்கிறதா இல்லையா என்பது அவர்கள் இரவில் படுக்கையில் எப்படிப் படுத்துத் தூங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஒரு கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர்.
அதாவது இரவில் கணவனும், மனைவியும் நிர்வாண கோலத்தில் தூங்கினால்தான் அவர்கள் மகிழ்ச்சிகரமான தம்பதியாம். இப்படிக் கூறுகிறது அந்த கருத்தக் கணிப்பு.
நிர்வாணமாக படுப்பவர்கள், அப்படிப் படுக்காதவர்களை விட திருமண பந்தத்தில் அதிக அளவில் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்களாம். இவர்களின் உறவுதான் அதிக இறுக்கமாக இருக்குமாம்.

57 சதவீதம் பேர் நிர்வாணம்தான்
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட 1004 இங்கிலாந்துக்காரர்களில் 57 சதவீதம் பேர் தாங்கள் இரவில் நிர்வாணமாக தூங்குவதாகவும், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

பைஜாமா மட்டும்
48 சதவீதம் பேர் பைஜாமா அணிந்து தூங்குவதாக கூறியுள்ளனர்.

நைட்டிக்கு 43 சதவீதம் ஓட்டு
நைட்டி அணிந்து தூங்குவதாக 43 சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

ஒன்சீ…
தலை முதல் கால் வரையிலான ஒரே உடையில் அதாவது ஒன்சீ - தூங்குவதாக 38சதவீதம் பேர் கூறியுள்ளனர்.

பாதிப் பேர் நிர்வாணம்தான்
இந்தக் கருத்துக் கணிப்பின்படி பார்த்தால் பாதிப் பேர் நிர்வாணமாகத்தான் தூங்குகிறார்கள்.

சும்மா படுக்கிறதுதா சுகம்..
33 வயதான ஸ்டீபன் மெக்கென்சி என்பவர் கூறுகையில், நான் 6 வருடமாக சும்மாதான் தூங்குகிறேன்.. ரொம்பச் செளகரியமாக இருக்கிறது என்கிறார்.

மனைவியும் அப்படித்தான்
என் மனைவியும் கூட அப்படித்தான். எங்கள் இருவரையும் அது மகிழ்ச்சியில் வைத்திருக்க உதவுகிறது. ரிலாக்ஸ்டாகவும் உணர வைக்கிறது.

ஆனால் படுக்கை அறையில் இப்படிச் செய்யப்படாதே
அதேசமயம், படுக்கை அறையில் தூக்கத்தைத் தவிர வேறு சில வேலைகளில் ஈடுபடுவதை தம்பதிகள் விரும்புவதில்லையாம்.

படுக்கையில் சாப்பாடு தப்பு…
படுக்கை அறையில் உட்கார்ந்து சாப்பிடுவதை 59 சதவீதம் பேர் வெறுக்கின்றனராம். அதேபோல படுக்கையில் அமர்ந்து கொண்டு சாக்ஸ் போடுவது, ஷூ மாட்டுவதை 23 சதவீதம் பேர் வெறுக்கின்றனராம்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications