காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.. கண்ணீர் விட வைக்கும் ஒரு பாசக் கதை
இறந்து போன எஜமானர் வருவார் என 80 நாட்களாக ஒரு நாய் காத்திருக்கிறது.
Recommended Video

பெய்ஜிங்: "எங்க அந்த நாய்"... என்று ரோட்டில் போறவங்க.. வர்றவங்க.. எல்லாருமே அந்த நாயைதான் திரும்பி திரும்பி பார்த்து கொண்டே போகிறார்கள், வருகிறார்கள்!!
அங்கு மட்டும் இல்லை... இந்த நாய் பத்தின வீடியோவை பார்த்தவர்களும், திரும்ப திரும்ப அதையே பார்த்து வருகிறார்கள். சீனாவின் பியர் வீடியோ இணையதளம் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளது.
சீனாவில் ஹோட் என்ற நகரில் பெண் ஒருவர் இந்த நாயை வளர்த்து வந்துள்ளார். அந்த அம்மாவுக்கு இந்த நாய் ரொம்பவும் க்ளோஸ் ஆகிவிட்டது. ரெண்டு பேரும் சாப்பிடும்போதும், தூங்கும்போதும் ஒருவரையொருவர் பிரிவதே இல்லை.

அடக்கம் செய்யப்பட்டார்
இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி அந்த அம்மா திடீரென சாலை விபத்தில் இறந்து விட்டார். அவர் உயிரிழந்த அடுத்த கணமே தனக்கு தெரிந்த மொழியில் அந்த நாய் அழுதது... போலீசார் வரும்வரையில் அந்த அம்மாவை விட்டு எங்குமே நகராமல் பாதுகாப்பாக நின்று கொண்டது. பிறகு போலீசார் விரைந்து சடலத்தை கொண்டு சென்று... அடக்கமும் செய்யப்பட்டு விட்டது.

கண்ணீர் மல்க நிற்கிறது
ஆனால் எந்த இடத்தில் அந்த அம்மா செத்துபோனார்களோ, அந்த இடத்தில் நின்ற நாய், இன்னமும் அதே இடத்திலேயே நின்று கொண்டிருக்கிறது. தன்னை வளர்த்த அம்மா எப்படியும் வந்துவிடுவார்கள், நம்மை வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போவார்கள் என்று இன்னமும் காத்து கொண்டிருக்கிறது. ஓனர் அம்மா இறந்து இப்போது 80 நாட்களுக்கும் மேலாகி விட்டது. சாலையோரம் இப்படி நாய் காத்திருப்பதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்ணீர் மல்க பார்த்து செல்கின்றனர்.

நெருங்கவே விடவில்லை
அந்த பக்கமாக யார் போனாலும் சரி... அந்த நாய்க்கு கொஞ்சம் சாப்பாடு தருகிறார்கள். முக்கியமாக டாக்ஸி டிரைவர்கள், சாப்பாட்டை தருவதுடன், அதை வளர்க்கலாம் என்று ஆசைப்பட்டு நெருங்கினால், தூரமாக போய் அந்த நாய் தனியாக நின்று கொள்கிறதாம். யார் கூப்பிட்டாலும் வருவதே கிடையாதாம்.

உணர்ச்சி பிழம்புகள்
இந்த காத்திருப்பு வீடியோ காட்சிதான் உலகம் முழுவதும் வைரல் ஆகியுள்ளது. "நாய் மாதிரி காத்துக்கிட்டு கிடந்தேன்" என்று நாம ரொம்ப ஈசியா வார்த்தைகளை சொல்லி விடுகிறோம். ஆனால் எதிர்பார்த்து காத்திருப்பது என்று வந்துவிட்டால் நாய் என்ன? மனிதன் என்ன? எல்லாமே வெளிக்காட்ட முடியாத உணர்ச்சி பிழம்புகள்தான்!! எல்லாமே ஆழமான உறவுகளின் வெளிப்பாடுகள்தான்! அவர் வருவாரா???
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications