பைக் திருட வந்த இடத்திலேயே பைக்கை தொலைச்சிட்டு போறதுதான் கர்மா.. பார்த்தால் சிரிப்பு உறுதி

Subscribe to Oneindia Tamil

ஜகார்த்தா: மோட்டார் சைக்கிளை திருட வந்த இடத்தில், மோட்டார் சைக்கிளை தொலைத்துவிட்டு சென்றுள்ளார்கள் திருடர்கள்.. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ போல் இல்லை.. இந்தோனேஷியா போன்ற வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ போன்று உள்ளது. எனினும் எங்கு எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.

இருசக்கர வாகனங்களை திருடுவது என்பது எல்லா இடங்களிலும் நடக்கிறது.. சைடுலாக் போட்டிருந்தாலும் கண் இமைக்கும் நேரத்தில், கோழியின் கழுத்தை திருகுவது போல் திருடி செல்கிறார்கள். இருசக்கர வாகனத்தை இவர் தான் விட்டு செல்கிறார் என்பதை அறிந்து கொள்ளும் திருடர்கள், அவர் வருகிறாரா என்பதை கண்காணிக்கிறார்கள். கொஞ்ச நேரத்தில் அவர் சென்ற உடன், யாரும் அந்த வாகனத்தை கவனிக்கவில்லை என்பதை அறிந்து கொண்டு பக்கத்தில் வருகிறார்கள்.

world international bike indonesia

அதன் பின்னர் மின்னல் வேகத்தில் சைட் லாக்கை உடைக்கிறார்கள். சிறிது தூரம் தள்ளி சென்று, டோக் போட்டு ஓட்டி செல்கிறார்கள். இல்லை என்றால் வயரை பிடுங்கிவிட்டு, ஸ்டார்ட் செய்து கொண்டு எஸ்கேப் ஆகிறார்கள். பொதுவாக இருசக்கர வாகனங்களை திருடுவோர் சிசிடிவி இல்லாத இடங்களில் தான் அதனை செய்ய முற்படுகிறார்கள். கிராமங்களில், சிறிய நகரங்களில், பெரிய நகரங்களை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில் சிறிய தெருக்களில் நைசாக வந்து இருசக்கர வாகனத்தை திருடுவதும் அடிக்கடி நடக்கிறது.

சென்னையை பொறுத்தவரை அதிக மக்கள் நெருக்கம் இருக்கும் பகுதிகள் என்பதால் திருடர்கள் வாகனங்களை திருடிவிட்டு அவ்வளவு எளிதில் தப்பிவிட முடியாது. அதேநேரம் வாகனத்தை விட்டு சென்றவர் இவர் தான் என்பதை அறிந்து, திட்டமிட்டு திருடும் திருடர்கள் திருடத்தான் செய்கிறார்கள். அதுவும் எப்படி என்றால், மாஸ்க் அணிந்து அல்லது முகமூடி அணிந்து திருடுகிறார்கள்.. இதுபோன்ற திருட்டுக்கள் பல பகுதிகளில் அடிக்கடி நடக்கின்றன.

ஆனால் திருடும் போது, சில திருடர்கள் வசமாக மாட்டிக்கொண்டு தர்ம அடி வாங்குவார்கள். சிலர் திருடும் இடத்தில் தப்பித்து பின்னர் போலீசிடம் சிக்கி அடிவாங்குவார்கள் ஒருசிலர் திருடும் போது வந்த வாகனத்தையும் சேர்த்து பறிகொடுத்துவிட்டு ஓடுவார்கள். அப்படித்தான் ஒரு சம்பவம் வெளிநாட்டில் நடந்துள்ளது.

மோட்டார் சைக்கிளை திருட வந்த இடத்தில், மோட்டார் சைக்கிளை தொலைத்துவிட்டு சென்றுள்ளார்கள் திருடர்கள்.. ஆட்கள் விரட்டிய உடன் என்ன செய்வது என்று தெரியவில்லை.. எல்லாரும் ஒன்று கூடிவிட்டார்கள்.. உடனே ஓடுவோம் என்று ஓடியிருக்கிறார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அந்த வீடியோவை பார்க்கும் போது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ போல் இல்லை.. இந்தோனேஷியா போன்ற வெளிநாட்டில் எடுக்கப்பட்ட வீடியோ போன்று உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+