For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சா பாதம் இல்ல! TikTok மூலம் புடினை நடுங்க வைத்த 20 வயது பெண்! திரும்பி பார்த்த மேற்குலகம்! எப்படி

Google Oneindia Tamil News

மாஸ்க்: உக்ரைனில் நடக்கும் போர் குறித்து பெண் ஒருவர் டிக் டாக் செயலியில் வைரல் வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். உக்ரைன் போரின் அடையாளமாக அந்த பெண் உருவெடுத்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கு முன் ரஷ்யா போர் தொடுத்தது. அதன்பின் கார்கிவ், கீவ், ஒடிசி உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறி வைத்து உக்ரைன் தாக்கி வருகிறது. இதுவரை உக்ரைனில் 10 ஆயிரம் பொதுமக்கள், 11 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை நடந்த போரில் ரஷ்யாவின் கையே ஓங்கி இருக்கிறது. இருப்பினும் உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்ற முடியாமல் ரஷ்ய படைகள் திணறி வருகின்றன.

உக்ரைன் போர்

உக்ரைன் போர்

இந்த நிலையில்தான் உக்ரைனில் நடக்கும் போர் குறித்த அனைத்து விவரங்களையும் டிக் டாக் செயலி மூலம் பெண் ஒருவர் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். உக்ரைன் போர் குறித்த பல்வேறு விவரங்கள் பொது மக்களுக்கும், வெளி உலகிற்கும் தெரிய இவர் காரணம் ஆகி இருக்கிறார். அந்த பெண் பெயர் மார்த்தா வஸ்யூத்தா. உக்ரேனியன், ரஷ்யன், ஆங்கிலம் என்று பல மொழிகளை பேச கூடியவர் இந்த பெண் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். இவருக்கு வெறும் 20 வயதுதான் ஆகிறது.

நடனம்

நடனம்

தொடக்கத்தில் இவரும் இன்ஸ்ட்டா ரீல்ஸ் போல கச்சா பாதம் போன்ற பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோ போட்டுகொண்டு இருந்துள்ளார். முக்கியமாக உக்ரைனில் வைரலாக இருந்த பல்வேறு பாடல்களுக்கு நடனம் ஆடி வீடியோ போட்டுகொண்டு இருந்தார். இவருக்கு முன்பில் இருந்தே நிறைய பின்தொடர்பாளர்கள் இருந்துள்ளனர். அதன்பின் உக்ரைன் போர் வந்ததும் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார்.

போர் வீடியோ

போர் வீடியோ

இந்த பின் தொடர்பாளர்களை வைத்து ஆக்கபூர்வமாக ஏதாவது விழிப்புணர்வு செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். உக்ரைன் போர் எப்படி நடக்கிறது என்று உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். இதையடுத்து பாடலுக்கு நடனம் ஆடுவதை விட்டுவிட்டு உக்ரைன் போர் பற்றி அப்டேட் கொடுக்க தொடங்கி உள்ளார். உக்ரைன் போர் தொடக்கத்தில் அதை பற்றிய தவறான பொய்யான வீடியோக்கள் பல வைரலாகி வந்தது.

உண்மை

உண்மை

இதையடுத்து மக்களுக்கு உண்மையை கொண்டு செல்ல வேண்டும், போர் பற்றி உண்மையான நிலவரத்தை எடுத்துரைக்க வேண்டும் என்று போர் பற்றி இவர் டிக்டாக் செய்ய தொடங்கி உள்ளார். நேரடியாக போர் நடக்கும் இடத்திற்கு சென்று அங்கிருந்து இவர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். களநிலவரங்களை அங்கிருந்து இவர் வெளியிட்டு வருகிறார்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் செல்ல முடியாத இடத்திற்கு கூட மார்த்தா சென்று வருவது குறிப்பிடத்தக்கது.

மார்த்தா வீடியோ

மார்த்தா வீடியோ

இவரின் வீடியோக்களை பல வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தங்களின் சோர்ஸாக பயன்படுத்தி செய்தி வெளியிட தொடங்கி உள்ளனர். டிக்டாகே இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் பிரபலம் என்பதால் உக்ரைன் போர் பற்றி தெரிந்து கொள்ள பலரும் மார்த்தா ஐடிக்குத்தான் செல்கின்றனர். இவரின் ஒவ்வொரு வீடியோக்களையும் பல மில்லியன் பேர் தினமும் பார்க்கிறார்கள்.

எப்படி நடக்கிறது

எப்படி நடக்கிறது

உக்ரைனில் ரஷ்யா எப்படி குடியிருப்பு பகுதியில் தாக்குகிறது என்பதை மார்த்தா வெளியிட்டு வருவதே மேற்கு உலகம் இவரை திரும்பி பார்க்க காரணம். மேலே ரஷ்ய ராக்கெட் பறந்து கொண்டு இருக்கும் போது கீழே பயப்படாமல் நின்று இவர் பேசும் வீடியோக்கள் டிரெண்டாகி வருகின்றன. அதேபோல் மக்கள் எங்கே செல்ல வேண்டும். எங்கே பாதுகாப்பாக இருக்கலாம் என்றும் இவர் வீடியோ வெளியிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

ரஷ்யா

ரஷ்யா

ஏற்கனவே இந்த போரில் ரஷ்யா இணையத்தில் தோல்வி அடைந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு இணையத்தில் ரஷ்யா மீதான எதிர்ப்பு நிலவி வருகிறது. புடின் மீது மேற்கு உலகை சேர்ந்த பல நாட்டு மக்கள் மதிப்பை இழந்துவிட்டனர். அதே போல் இப்போது மார்த்தா வீடியோக்கள் மூலம் ரஷ்யாவின் போர் முறைகள் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. கிட்டத்தட்ட புடினை நடுங்க வைக்கும் அளவிற்கும், ரஷ்யாவிற்கு சிம்ம சொப்பனம் ஆகும் வகையிலும் மார்த்தா வீடியோ வெளியிட்டு வருகிறார்.

English summary
The Ukraine woman tiktoker named Marta who raises her voice against Russia with videos.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X