இந்தியா அனுப்பிய மெசேஜ்.. தென்சீன கடல் எல்லையில் அமெரிக்கா "ரிட்டர்ன்".. அடி மேல் அடி வாங்கும் சீனா
பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் இந்தியா முதல்முறையாக குரல் கொடுத்ததை அடுத்து தற்போது அமெரிக்கா தனது போர் கப்பல்களை மீண்டும் தென் சீன கடல் பகுதிக்கு அனுப்பி உள்ளது. அமெரிக்காவிற்கு இந்தியாவின் ஆதரவு கிடைத்து உள்ள நிலையில் அங்கு மீண்டும் அமெரிக்கா தனது காலடி தடத்தை பதித்து உள்ளது.
Recommended Video
தென் சீன கடல் எல்லை பிரச்சனை ஆசிய நாடுகளில் நடக்கும் பிரச்சனை என்பதை தாண்டி தற்போது உலகம் முழுமைக்குமான பிரச்சனையாக மாறியுள்ளது. தென் சீன கடல் எல்லை பிரச்சனை குறித்து சுருக்கமான தெரிவிக்க வேண்டும் என்றால், 6 நாடுகள் பகிர்ந்து கொள்ளும் ஒரு கடல் பரபரப்பை மொத்தமாக சீனா தனக்கு மட்டும் சொந்தம் என்று கூறி வருகிறது.
தென் சீன கடல் பகுதியில் 90% இடங்களை சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இங்கு இருக்கும் அதீத எண்ணெய் வளம் மற்றும் பொருளாதார வர்த்தக போக்குவரத்தை கருத்தில் கொண்டு சீனா இப்படி உரிமை கொண்டாடுகிறது.

ஆனால் மற்ற நாடுகள்
ஆனால் இதே கடல் எல்லையில்தான் மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் இருக்கிறது. இந்த நாடுகளின் கடல் பகுதியையும், சர்வதேச கடல் பகுதியையும் சேர்த்துதான் சீனா இப்படி சொந்தம் கொண்டாடுகிறது. இந்த கடல் பகுதியில் சீனா அடிக்கடி அத்துமீறுவது வழக்கம்.அதேபோல் இங்கு சீனா போர் பயிற்சிகளை மேற்கொள்வதும் வழக்கம். இதுதான் தென் சீன கடல் எல்லை பிரச்னைக்கு காரணம்.

அமெரிக்கா படைகள்
இந்த நிலையில்தான் அமெரிக்கா இந்த இடத்தில் படைகளை இறக்கியது. வரிசையாக போர் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களை வைத்து அங்கு ரோந்து பணிகளை செய்தது. மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்கா படைகளை அனுப்பியது. தென் சீன கடல் பகுதியில் உள்ளே சர்வதேச கடல்பரப்பில் மட்டும் அமெரிக்கா இப்படி ரோந்து பணிகளை செய்தது.

எப்போது வரை
அதன்படி கடந்த மே மாதம் இரண்டாம் வாரம் தென் சீன கடல் எல்லை பகுதிக்கு அமெரிக்கா தனது போர் கப்பல்களான யுஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய அணு ஆயுத போர் கப்பல்களை அனுப்பியது. இதனால் அங்கு போர் பதற்றம் ஏற்பட்டது. கடந்த 8ம் தேதி வரை இங்கு அமெரிக்கா தீவிரமாக போர் பயிற்சிகளை செய்தது. அதோடு சீனாவும் அமெரிக்காவிற்கு எதிராக போர் பயிற்சிகளை மேற்கொண்டது.

திரும்பி சென்றது
இந்த நிலையில் அமெரிக்காவின் போர் கப்பல்கள் அங்கிருந்து கடந்த 9ம் தேதி திரும்பி சென்றது. பசிபிக் கடலின் நடுப்பகுதிக்கு சென்றது. சீனாவின் எல்லைக்கு அருகே இருந்த கப்பல்கள் அங்கிருந்து பின்வாங்கியது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. ஆனால் திடீரென இப்படி அமெரிக்கா பின்வாங்கியது. தற்போது புதிய திருப்பமாக நேற்று இரவு அமெரிக்காவின் போர் கப்பல்கள் சீனாவின் கடல் பகுதிக்கு மிக அருகில் வந்துள்ளது.

மீண்டும் அருகே வந்தது
யுஎஸ்எஸ் நிமிட்ஸ் மற்றும் யுஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் ஆகிய அணு ஆயுத போர் கப்பல்கள் இரண்டும் எல்லைக்கு மிக அருகில் வந்தது. இதற்கு பின் இந்தியா அனுப்பிய மெசேஜ் ஒன்றுதான் காரணம் என்று கூறுகிறார்கள். அதன்படி தென் சீன கடல் எல்லை பிரச்சனையில் இந்தியா முதல்முறையாக கருத்து தெரிவித்தது. அதில், தென் சீன கடல் என்பது சர்வதேச பிரச்சனை. இது சர்வதேச நாடுகளுக்கு சொந்தமான கடல் பகுதி.

அமைதி நிலவ வேண்டும்
அது உலக நாடுகளுக்கு சொந்தமான பொதுவான பரப்பு . அந்த பகுதியில் அமைதி மற்றும் நிலையான தன்மை நிலவ வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம். இந்த சர்வதேச கடல் பகுதியில் சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு அனைத்து நாடுகளும் செயல்பட வேண்டும். மற்ற நாடுகளுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் இந்த சர்வதேச பகுதியை அனைத்து நாடுகளும் பயன்படுத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

சீனா ஷாக்
சீனா இந்த கடல் பரப்பு மொத்தத்தையும் உரிமை கொண்டாடி வரும் நிலையில், திடீரென இந்தியா இந்த கடல் பரபரப்பை சர்வதேச கடற்பகுதி என்று அறிவித்து உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா, வியட்நாம், தைவான், புரூனாய், பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் மட்டுமே இப்படி கூறி வந்த நிலையில், இந்தியாவும் இதே போல அறிவித்து இருக்கிறது. இதுதான் அமெரிக்காவிற்கு புதிய பலமாக மாறியுள்ளது.

ரிட்டர்ன்ஸ் காரணம்
இந்தியாவின் இந்த ஆதரவு அமெரிக்காவிற்கு எல்லை பிரச்சனையில் புதிய பலத்தை கொடுத்துள்ளது. ஆசிய அளவில் அமெரிக்காவிற்கு இதனால் ஆதரவு அதிகம் ஆகியுள்ளது. இதனால்தான் சீனாவின் எல்லையில் இருந்து போர் கப்பல்களை பின்வாங்கிய அமெரிக்கா மீண்டும் அங்கே போர் கப்பல்களை அனுப்பி உள்ளது. இந்தியா கொடுத்த மெசெஜூம், உத்வேகமும்தான் இந்த ரிட்டனுக்கு காரணம் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications