துப்பாக்கி பிடிக்கும் ஆசையில் ஐஎஸ் அமைப்பில் சேர்ந்து அவதிப்படும் பெண்கள்
நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் உள்ள பெண்கள் படை ஆட்களை பணியமர்த்துவது, உளவு பார்ப்பது, செக்ஸ் அடிமை சந்தைக்கு ஆட்களை அனுப்புவது உள்ளிட்ட வேலைகளை செய்து வருவது தெரிய வந்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்பட்டு வரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் பெண் படையும் உள்ளது. ஆனால் அந்த பெண் படையில் உள்ளவர்கள் பிற தீவிரவாத அமைப்புகளைப் போன்று தாக்குதல் செயல்களில் ஈடுபடுத்தப்படுவது இல்லை.
இந்நிலையில் ஈராக்கில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்தவரின் மனைவியான உம் சயப் அமெரிக்கப் படையிடம் சிக்கியுள்ளார்.

பெண் தீவிரவாதி
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைமை நிதி அதிகாரியான அபு சயப் கடந்த மே மாதம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பலியானார். அவரது மனைவியும், அமைப்பு உறுப்பினருமான உம் சயப் அமெரிக்காவின் பிடியில் உள்ளார்.

தகவல்
அபு சயபின் வீட்டில் இருந்து செல்போன், கம்ப்யூட்டர், ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவரது மனைவி உம் சயபிடம் இருந்து அமெரிக்க அதிகாரிகளுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளது.

பெண் படை
உம் சயப் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் பெண் படையை நடத்த உதவி செய்துள்ளார். அவருக்கு தீவிரவாதிகள் பற்றி பல தகவல்கள் தெரிந்துள்ளது. பெண் படையினர் என்ன செய்வார்கள் என்பதும் அவருக்கு தெரிந்துள்ளது.

செக்ஸ் அடிமை
ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் உள்ள பெண் படையில் துவக்க நிலையில் உள்ளவர்கள் ஆண் தீவிரவாதிகளின் செக்ஸ் தேவையை பூர்த்தி செய்து குழந்தை பெறுவது தான் அவர்களின் வேலையாம். அமைப்புக்கு ஆட்களை சேர்ப்பது, உளவு பார்ப்பது, செக்ஸ் அடிமை சந்தைக்கு பெண்களை அனுப்பி வைப்பது மட்டுமே பெண் தீவிரவாத படையின் வேலை.

ஏமாற்றம்
பல பெண்கள் துப்பாக்கி ஏந்தி போராடும் ஆசையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்ந்துள்ளனர். ஆனால் அமைப்பில் சேர்ந்த பிறகு தான் பெண்கள் போராட அனுமதிக்கப்படுவது இல்லை என்பதே அவர்களுக்கு தெரிந்துள்ளது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications