For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகை பயமுறுத்தும் புது வகை கொரோனா வைரசின் பெயர் ஓமிக்ரான்! பெயர் சூட்டிய ஹூ! அர்த்தம் என்ன தெரியுமா

Google Oneindia Tamil News

ஜெனிவா: அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசின் B.1.1.529 வேரியண்ட்டுக்கு உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் (Omicron) என்று பெயர் வழங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ், மிகவும் ஆபத்தானதாகவும், 32 வகைகளில் ஸ்பைக் உருமாற்றம் அடையக் கூடியது என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கவலைக்குரிய வேரியண்ட்டாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் மீண்டும் வெள்ளம் - சுரங்கப்பாதைகள் மூடல் சென்னையில் விடிய விடிய கொட்டித்தீர்த்த மழையால் மீண்டும் வெள்ளம் - சுரங்கப்பாதைகள் மூடல்

உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் டெல்டா மற்றும் அதற்கு அடுத்தபடி ஆபத்தானதாக பார்க்கப்படும், ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற வகைகளுடன் இப்போது ஓமிக்ரானும் கவலையளிக்க கூடிய வேரியண்ட்டாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்கா

தென் ஆப்பிரிக்கா

தென்னாபிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இதுவரை இந்த வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சர்வதேச பயணங்களின் மூலம் தென்னாப்பிரிக்காவிலிருந்து பல நாடுகளுக்கும் இது பரவுகிறது என்பதால் பல நாடுகளும் ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளுக்கு விமான சேவையை ரத்து செய்ய ஆரம்பித்துள்ளன.

பங்குச் சந்தைகள்

பங்குச் சந்தைகள்

மேலும் புதிய வைரஸ் தொடர்பான அச்சத்தால், இந்தியா உட்பட பல நாடுகளில் பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. கச்சா எண்ணெய் விலையில் மாறுபாடுகள் ஆரம்பித்துள்ளன. கொரோனா பரவல் ஆரம்பித்தது முதல், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. ஆனால், தடுப்பூசிகளுக்கு பிறகு, உலகளாவிய அளவில் பொருளாதாரம் மீண்டும் வளர்ந்து வரும் சூழ்நிலையில் ஓமிக்ரான், காரணமாக பொருளாதார வளர்ச்சி தடைபடுமோ என்ற பயம் பொருளாதார நிபுணர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தடுப்பூசி பலன் தருமா

தடுப்பூசி பலன் தருமா

இதனிடையே, புதிய வகை வைரஸ் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுகிறதா என்பதை அறிந்துகொள்வதற்கு இன்னமும் பல வாரங்கள் தேவைப்படும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

Recommended Video

    கொரோனா வந்தும் கமல்ஹாசன் நல்லாயிருக்குறதுக்கு காரணமே ரெண்டு தடுப்பூசிதான்.. மா. சு தகவல்!
    பெயர் அர்த்தம்

    பெயர் அர்த்தம்

    கொரோனா வைரஸ் வகைகளுக்கு கிரேக்க மொழியில் விஞ்ஞானிகள் பெயர் சூட்டுகிறார்கள். அந்த வகையில் ஓமிக்ரான் என்றால் சிறிய என்று அர்த்தம். பெயருக்கு ஏற்ப சிறிய அளவு தென்ஆப்பிரிக்காவில் ஏற்படுத்திய பாதிப்புகளோடு, இந்த வைரஸ் பரவல் நின்றுவிட வேண்டும் என்பதுதான் உலகம் முழுக்க உள்ள மக்களின் வேண்டுதலாக இருக்கிறது.

    English summary
    Corona new variant: The World Health Organization has named the recently discovered B.1.1.529 variant (South Africa corona variant) of the corona virus Omicron.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X