For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்ன?! பல்செட்டின் விலை 91 லட்சம் ரூபாயா? இப்பவே கண்ணைக் கட்டுதே!

Google Oneindia Tamil News

The world’s most expensive smile: Dubai dentist crafts diamond-encrusted dentures worth $152,700
பஹ்ரைன்: துபாயில் பல்மருத்துவ நிபுணர் ஒருவர் விலை உயர்ந்த வைரங்கள் பதித்த பல்செட் ஒன்றை செயற்கையாக உருவாக்கி சாதனை புரிந்துள்ளார்.

துபாயில் உள்ள லிபர்ட்டி பல் மருத்துவமனையின் மருத்துவர்தான் இதை உருவாக்கி உள்ளார். இதன் மதிப்பு ரூபாய் 91 லட்சங்களாகும். 24 தூய கேரட் தங்கத்தில் வண்ண, வண்ணமாய் மிளிரும் 160 வைரங்கள் அதில் பதிக்கப்பட்டு உள்ளன.

சிரிக்கும் போது ஒளி தரும் புன்னகையை கொடுக்கும் இந்த பற்செட்டை தயாரித்த லிபர்ட்டி பல் மருத்துவமனை பெல்ஜியத்தை சேர்ந்த உலக வைர நிறுவனத்திடம் இந்த வைரங்களுக்கான நம்பகத்தன்மை சான்றிதழை வாங்கிவைத்து உள்ளது.

ஆனால் இதை வாங்குபவர் இதை ஒரு ஒரு பேஷனாக அணிந்து கொள்ளலாம். இதை அணிந்து கொண்டு உணவு உண்ண கூடாது. எதையும் கடிக்கும் வேலையெல்லாம் வைத்துக் கொள்ளக் கூடாது.

இந்து குறித்து லிபரட்டி பல் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் மஜித் நஜி, "துபாயை சேர்ந்த ஆட்டிஸம் பாதித்த குழந்தைகள் தொண்டு நிறுவனத்திற்கு நிதி சேர்க்க இந்த செயற்கை பல் செட் உருவாக்கப்பட்டது" என்று தெரிவித்துள்ளார்.

English summary
A Dubai dentist has created the world's most expensive dentures worth a staggering $152,700.With ten grams of 24 pure carat gold and 160 sparkling encrusted diamonds it will certainly provide that most wanted glittering smile. And its creators, the Liberty Dental Clinic, have even acquired the authenticity and clarity certificate from the World Diamond Institute in Belgium.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X