நண்பேன்டா.. இந்தியாவில் நட்பு எப்படி இருக்குன்னு பாருங்க! மெச்சிக்கொண்ட ஆஸ்திரேலியர்
சிட்னி: நட்பு என்றால், உலகம் முழுவதும் அதற்கு ஒரே அர்த்தம்தான். ஆனால், பல்வேறு நாடுகளில் நட்பின் தன்மை வேறுபடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தியர்களின் நட்புணர்வுக்கு தனி இலக்கணமே எழுதலாம். இப்படி இருக்கையில் இந்தியர்களின் நட்புணர்வு குறித்து ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஒருவர் பெருமையாக கூறியிருப்பது கவனம் ஈர்த்திருக்கிறது.
ஆஸ்திரேலியரான ஆண்டி இவான்ஸ், இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான நட்பு வேறுபாடுகள் குறித்து இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். இது சமூக வலைத்தளங்களில் பரவலாக ஷேராகி வருகிறது.

நட்பு என்றால் இதுதான்!
ஆண்டி இவான்ஸ் இன்ஸ்டாகிராமில், "இந்தியாவில் நண்பர்கள் உறவு மிகவும் ஆழமானது. வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் அவர்கள் அக்கறை காட்டுகிறார்கள். இது ஆஸ்திரேலியாவில் இருக்கும் சாதாரணமாக அணுகுமுறையிலிருந்து வேறுபடுகிறது. இதை நான் புரிந்து கொள்ள சிறிது காலம் ஆனது. ஆனால், இந்திய மக்கள் தங்கள் நண்பர்களின் வெற்றிகளைக் கொண்டாட விரும்புகிறார்கள்.
சாதாரண விஷயம் கிடையாது
இது சாதாரணம் இல்லை. ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற கொண்டாட்டங்கள் இயல்பில்லை. இந்தியாவுக்கு வந்தால், உங்கள் நண்பரின் திருமண நாளை கூட அவர்கள் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டு கொண்டாடுகிறீர்கள். இந்தியாவுக்கு வரும் வரை என் வாழ்வில் இதை நான் பார்த்ததில்லை" என்று கூறியுள்ளார்.
வியந்த அமெரிக்கர்
சோஷியல் மீடியாக்களில் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த பதிவு, 103,000 பார்வைகளையும் 4,000-க்கும் மேற்பட்ட லைக்குகளையும் குவித்துள்ளது. அமெரிக்கப் பயனர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், "நீங்கள் சொல்வது உண்மை! இந்திய சமூகத்தில் எனக்கு இது மிகவும் பிடிக்கும். ஒரு அமெரிக்கனாக, நான் ஒருவரை வாழ்த்துவேன். ஆனால், நாங்கள் மிகவும் நெருக்கமானவர்களாக இல்லாவிட்டால் இணையத்தில் எல்லா இடங்களிலும் அவர்களைப் பற்றிப் பெருமை பேசவோ அல்லது பார்ட்டி செய்யவோ மாட்டேன்" என கமெண்ட் செய்திருக்கிறார்.
மற்றொரு யூசர், "ஆம், நாங்கள் ஒருவருக்கொருவர் ஆதரவு காட்டுகிறோம்" என்றுத் தெரிவித்தார். இந்திய யூசர் ஒருவர், "நான் ஒரு இந்தியனாக இதை எல்லாக் இடங்களிலும் சாதாரணம் என்று நினைத்தேன்" என்றார்.
இந்தியர்களின் நட்பு
இந்தியாவை பொறுத்தவரை, சாதிய உணர்வுகள் ஆழமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இது உடைகிற இடம் நட்புதான். நண்பர்களுக்கு இடையில் சாதிய வேறுபாடுகள் கிடையாது. நண்பர்களுக்கு இடையில் மதம், பாலினம், மொழி என எந்த வேறுபாடும் கிடையாது. தனக்கு கிடைத்தது, தனது நண்பனுக்கும் கிடைக்க வேண்டும் என ஆசை நண்பர்களுக்கு இருக்கும். கிடைக்கவில்லை எனில், அது கிடைக்கும் போராட்டத்தில் தோளுடன் தோள் நிற்பான்.
தனக்கு கிடைக்கவில்லை என்றாலும், நண்பனுக்கு கிடைத்தால்.. அதை தன்னுடைய வெற்றியாகவும் கொண்டாடுவான். இதுதான் இந்தியர்களின் நட்புணர்வு. இதைத்தான் ஆஸ்திரேலியர் பாராட்டியுள்ளார்.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications