இவங்களுக்கு ஓட்டுப் போடுறதுக்கு செத்துப் போய்டலாம்.. அமெரிக்காவை அலற வைத்த "பாட்டி"!
வாஷிங்டன்: அமெரி்க்காவைச் சேர்ந்த மேரி ஆன் நோலன்ட் புற்றுநோயுடன் போராடி தோல்வியுற்று மரணத்தைத் தழுவினார். ஆனால் இப்போது அவரது மரணம் அங்கு வைரல் ஆகியுள்ளது. காரணம் - அவரது குடும்பம் வெளியிட்ட இரங்கல் குறிப்பு.
விர்ஜீனியாவைச் சேர்ந்தவர் மேரி ஆன் நோலன்ட், அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தின் ரிச்மான்ட் நகரைச் சேர்ந்தவர். 68 வயதான இந்தப் பாட்டிக்கு புற்றுநோய் இருந்து வந்தது. இதற்காக சிகிச்சை பெற்று வந்தார். கடந்த மே மாதம் இவர் மரணமடைந்தார்.

இந்த நிலையில் அவரது குடும்பம் ஒரு இரங்கல் குறிப்பை வெளியிட்டிருந்தது. அது வைரல் ஆகியுள்ளது. காரணம், அந்த. இரங்கல் குறிப்பில் இடம் பெற்றிருந்த நக்கல், நையாண்டிதான்.
அதில், "ஹிலரி கிளிண்டனுக்கோ அல்லது டொனால்ட் டிரம்ப்புக்கோ ஓட்டுப் போடுவதை விட மரணமே மேலானது என்று நினைத்ததால் மேரி ஆன் நோலன்ட் மரணத்தைத் தழுவிக் கொண்டார். இந்த சிக்கலில் மாட்டிக் கொள்வதை விட மரணமே மேல் என்று அவருக்குத் தோன்றியுள்ளது என்று அந்த இரங்கல் குறிப்பு கூறுகிறது.

நவம்பர் 8ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஹிலரியும், குடியரசுக் கட்சி சார்பில் டிரம்ப்பும் போட்டியிடவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மேரியின் கணவர் ஜிம் நோலன்ட் கூறுகையில், இது எனது மகன்களில் ஒருவர் எழுதிய குரிப்பு. இது யாரையும் தாக்கும் நோக்கில் எழுதப்படவில்லை. மாறாக அரசியல் நிலவரத்தை வைத்து எழுதப்பட்ட ஹேஷ்யமான கருத்துதான் என்று கூறியுள்ளார்.
நல்லா கிளப்புறீங்கய்யா பீதியை!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications