நெருங்கும் ஆபத்து? செப்டம்பரில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பம் பதிவு.. ஆய்வாளர்கள் எச்சரிக்கை.. ஷாக்
பாரிஸ்: உலகம் தொடர்ந்து வெப்ப மயமாகிக்கொண்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்து வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இது காலநிலை மாற்றம் தொடங்கிவிட்டது என்பதை உணர்த்துவதாகவும் எச்சரித்துள்ளனர்.
கடந்த 1900களில் தொடங்கிய தொழில் புரட்சி காரணமாக உலகின் வெப்ப நிலை மெதுவாக உயர்ந்து வந்த நிலையில், தற்போது இது மிக தீவிரமாக அதிகரித்திருக்கிறது. சூரியனிலிருந்து பூமிக்கு வரும் வெப்பம் மீண்டும் பூமியிலிருந்து வெளியேறும். ஆனால் தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளிவரும் புகைகள் வளிமண்டலத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதால் இந்த வெப்பம் வெளியேறாமல் அப்படியே பூமியில் தங்கிவிடுகிறது. இதனால் பூமியின் வெப்பம் அதிகரிக்கிறது.

இந்த பிரச்னைக்கு தீர்வு காண கடந்த 2015ம் ஆண்டு பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற வருடாந்திர ஐ.நா மாநாட்டில் ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டது. இது பாரிஸ் ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தத்தின்படி தொழில் புரட்சிக்கு முன்பு இருந்ததைவிட 1.5 டிகிரி செல்சியஸுக்கு மேல் உலக வெப்பநிலை உயராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா உட்பட 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.
இதை சாத்தியப்படுத்த வேண்டும் எனில் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும். அதாவது பெட்ரோல், டீசல், நிலக்கரி போன்ற பூமிக்கு அடியிலிருந்து எடுத்து பயன்படுத்தப்படும் புதை படிம எரிபொருளின் பயன்பாட்டை முற்றிலும் தடுக்க வெண்டும். அப்படி செய்தால்தான் கரியமில வாயு வெளியேற்றத்தை கட்டுப்படுத்த முடியும். இப்படியான விவாதங்கள் ஒருபுறம் சென்றுக்கொண்டிருக்கையில் மறுபுறம் பூமியன் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது.
அதாவது, கடந்த செப்டம்பர் மாதத்தில் பூமியின் வெப்பநிலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது என ஐரோப்பிய யூனியன் பருவநிலை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்திருக்கிறது. கடந்த செப்டம்பர் மாதம் உலகின் சராசரி வெப்பநிலை 16.38 டிகிரி செல்சியஸ். இது கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவான வெப்பநிலையை விட 0.5 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். கடந்த ஜூலை மாதம் வரையில் 2020ம் ஆண்டு செப்டம்பரில் பதிவான வெப்பம்தான் இதுவரை செப்டம்பர் மாதத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலை என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இது தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது.
புரியும்படி சொல்வதெனில் கடந்த 1991 முதல் 2020ம் ஆண்டு வரை சராசரி மாதாந்திர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு செப்டம்பரில் பதிவாகியுள்ள வெப்பம் 0.93 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். இதுவே 1850-1900 காலகட்டத்தின் சராசரி மாதாந்திர வெப்பநிலையுடன் ஒப்பிடுகையில் இது 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். பாரிஸ் ஒப்பந்தத்தில் இது 1.5 டிகிரிக்கு அதிகமாக போய்விடக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டிருந்து. இந்நிலையில் இப்படியான உயர்வு மூலம் பருவநிலை மாற்றம் வந்துவிட்டது என்பதை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என ஐரோப்பிய யூனியனின் பருவநிலைக் கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.
ஏற்கெனவே பிரிட்டனில் ஏற்பட்ட வெப்ப அலை, பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளம் போன்றவை பருவநிலை மாற்றத்தால்தான் ஏற்பட்டிருக்கிறது என்று விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications