நெருங்கும் ‘நவுல்’... பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
மணிலா: நவுல் புயல் தாக்க உள்ளதால், பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நவுல் என்ற புயல், இன்று தாக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதி பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 முதல் 195 கிமீ வேகத்தை தாண்டி சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல், அங்கு அரிசி விளைச்சலில் முக்கியமான பிராந்தியமான ககாயன், இசபெல்லா மாகாணங்களை தாக்கி விட்டு, வலுவிழந்து, சியர்ரா மத்ரேயை கடந்து வடகிழக்கில் உள்ள லுசானை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக 19 இடங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, லுசான் தீவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயலை காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் வெளி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், 1000க்கும் அதிகமான கப்பல்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடன் ஆங்காங்கே கடலில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் வரும் 6 விமானங்களை சிபு பசிபிக் ரத்து செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்டிற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்குகின்றன. இதுவரை பதிவான புயல்களில், கடந்த 2013ம் ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய ஹையான் புயல் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications