கிரீன்லாந்தில் வெடித்த போராட்டம்.. டிரம்புக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்! ஜர்க் ஆகும் US

Subscribe to Oneindia Tamil

நூக்: டொனால்ட் டிரம்ப், டென்மார்க்கின் கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க விருப்பம் தெரிவித்திருந்தார். இதற்கு கிரீன்லாந்து அமைதியாக ஒப்புக்கொள்ளவில்லை எனில், தனது பலத்தை பயன்படுத்த வேண்டி வரும் என்றும் எச்சரித்திருந்தார். இந்த நிலையில் ட்ரம்புக்கு எதிராக கிரீன்லாந்தில் ஆயிரக்கணக்கான மக்கள் மாபெரும் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

கிரீன்லாந்து அமெரிக்காவுடன் ஒப்படைக்க தடையாக இருக்கும் நாடுகள் மீது, வர்த்தக வரிகளை விதிக்கப் போவதாக எச்சரிக்கை விடுத்தார் டிரம்ப். மேலும் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக கிரீன்லாந்து, அமெரிக்காவுக்கு தேவை என்றும், அவசியம் ஏற்பட்டால் ராணுவ பலத்தை பயன்படுத்தி கிரீன்லாந்தை இணைக்க தயங்க மாட்டேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

Greenland Trump tariff

போராடும் மக்கள்

இந்நிலையில் டிரம்பின் கருத்துக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. கிரீன்லாந்து மக்கள் தொகையில் 85 சதவீதம் பேர், அமெரிக்காவுடன் இணைவதை கடுமையாக எதிர்க்கின்றனர். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்ற முழக்கத்துடன், மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கண்டன முழக்கம்

டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள சிட்டி ஹால் சதுக்கத்தில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். பின்னர் அங்கிருந்து அமெரிக்க தூதரகம் நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் டிரம்புக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பியிருந்தனர்.

அமெரிக்க மக்கள் ஆதரவு

அதிபர் ட்ரம்பின் கருத்துக்கு மாறாக, அமெரிக்காவின் ஜனநாயக மற்றும் குடியரசு கட்சிகளை சேர்ந்த 11 உறுப்பினர்கள் கொண்ட குழு, டென்மார்க் தலைநகரத்திற்கு சென்றிருக்கிறது.

அமெரிக்க மக்கள் பெரும்பாலானோர், டிரம்ப் திட்டத்தை ஆதரிக்கவில்லை என்றும், கிரீன்லாந்தை நட்புடன் நாங்கள் மதிக்கிறோம் என்றும் இந்த குழுவின் தலைமை டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து தலைவர்களிடம் உறுதியளித்தது.

ஐரோப்பிய நாடுகள்

ஐரோப்பிய நாடுகளில் ராணுவ ஒத்துழைப்பும், தற்போது கிரீன்லாந்தில் பதட்டத்தை அதிகரித்திருக்கிறது. ட்ரம்பின் மிரட்டலைத் தொடர்ந்து, டென்மார்க்குக்கு ஆதரவாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் நார்வே போன்ற நாடுகளில் விரைவில் கிரீன்லாந்துக்கு தங்கள் ராணுவ பிரிவுகளை அனுப்ப தொடங்கியுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+