இஸ்ரேல் பிரதமரின் தேர்தல் செலவிற்கான 90 சதவீத நிதி அமெரிக்காவில் இருந்து கொட்டுகிறது!

Subscribe to Oneindia Tamil

டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தேர்தல் செலவிற்காக வந்துள்ள நிதியில் 90 சதவீதத்தை அமெரிக்காவை சேர்ந்த மூன்றே குடும்பங்கள் 'கொட்டி' கொடுத்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேலில் பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போட்டியிடுகிறார். தேர்தல் பிரச்சாரத்தில் அவரே அதிக அளவுக்கு ஆரவாரத்துடன் ஈடுபட்டுவருகிறார். நெதன்யாகுவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிடைத்துவரும் அதிகப்படியான நிதியும், இதற்கு ஒரு காரணம்.

Three American families are funding half of Israel PM Netanyahu’s re-election bid

இஸ்ரேல் நாட்டு கணக்கு தணிக்கை அலுவலக கணக்கீட்டுப்படி, இதுவரை நெதன்யாகு 250,000 அமெரிக்க டாலர் மதிப்புக்கு நிதி திரட்டியுள்ளார். அதில் 90 சதவீதம் அமெரிக்காவில் இருந்து வந்துள்ளது. கடந்த மூன்று தேர்தல்களை எடுத்துக் கொண்டாலும், நெதன்யாகுவிற்கு அமெரிக்காவில் இருந்துதான் 90 சதவீத, நிதி வந்துள்ளது. அதிலும் அமெரிக்காவில் வசிக்கும் 3 குடும்பங்கள்தான் அதிக நிதியை கொட்டிக் கொடுத்துள்ளதும் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

ஃபுளோரிடாவிலுள்ள நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் தலா 11,500 அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளனர்.

நியூஜெர்சியை சேர்ந்த ஜெட்சப்போர்ட் சிஸ்டம் உரிமையாளர்கள் தலா 11,000 அமெரிக்க டாலர்களை வழங்கியுள்ளனர். அமெரிக்க ஈகிள் பேஷன் செயின் நிறுவனங்களின் உரிமையாளர் குடும்பத்தினர் தலா 10,000 அமெரிக்க டாலர்களை அளித்துள்ளனர். இந்த மூன்று குடும்பங்கள் நெதன்யாகுவின் பெரும்பாலான நிதி உதவிக்கு காரணமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+