ஏலத்திற்கு வரும் டைட்டானிக் பிணக்குவியல் புகைப்படம்
லண்டன்: டைட்டானிக் கப்பல் விபத்தில் பலியானவர்கள் எப்படி அடக்கம் செய்யப்பட்டனர் என்பதை உணர்த்தும் அரியவகை புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இது விரைவில் ஏலம் விடப்பட உள்ளது.
மிகப் பிரம்மாண்டமான சொகுசு கப்பலான 'டைட்டானிக்' தனது முதல் பயணத்தின் போதே நியூயார்க் நகருக்கு செல்லும் வழியில் 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதியன்று அன்று கடலில் மூழ்கி ஜலசமாதியானது.

2,244 பயணிகள்..
வட அட்லாண்டிக் பெருங்கடலில் இந்த கோர விபத்து நேர்ந்த போது டைட்டானிக் கப்பலில் 2 ஆயிரத்து 224 பயணிகள் இருந்தனர்.

710 பேர் மட்டும் மீட்பு...
கப்பல் இரண்டாக பிளந்ததால் ஆயிரக் கணக்கானவர்கள் கடல் நீரில் மூழ்கி உடல் உறைந்து பரிதாபமாக பலியாகினர். 710 பேர் மட்டுமே மீட்பு படகுகளின் மூலம் உயிர் தப்பி நியூயார்க் நகருக்கு வந்து சேர்ந்தனர்.

மெகா ஹிட் படம்...
இந்த விபத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படமான டைட்டானிக் உலக அளவில் மெகா ஹிட் படமானது. இந்த விபத்து நடைபெற்று நூறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

பொய்யாக்கும் புகைப்படம்...
இந்த விபத்தில் பலியானவர்களின் சடலங்கள் உரிய மரியாதையுடன் சிறப்பான முறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டு வந்தது. ஆனால், இந்த கூற்றை பொய்ப்பிக்கும் வரலாற்று சிறப்புமிக்க அரிய புகைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சாக்குமூட்டையில் கட்டி...
நீரில் மூழ்கி இறந்த பயணிகளின் சடலங்களை சாக்கு மூட்டைகளில் கட்டி குவித்து வைத்திருக்கும் காட்சியும், இரண்டு கடற்படை சிப்பாய்கள் சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட ஒரு பிரேதத்தை அனாயசமாக கொண்டு வந்து கீழே போடும் காட்சியும் இந்த அரிய புகைப்படத்தில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
100 ஆண்டுகளுக்கு பிறகு பொதுமக்களின் பார்வைக்கு வந்துள்ள இந்த வரலாற்று சிறப்புமிக்க புகைப்படம் அக்டோபர் 19ம் தேதி ஏலத்திற்கு வருகிறது.

ரூ. 5 லட்சம்
இந்த புகைப்படம் ஒரு மிகப்பெரிய சோக வரலாற்றுடன் தொடர்புடையது என்பதால் சுமார் 5 ஆயிரம் பவுண்டுகள் (இந்திய மதிப்புக்கு சுமார் 5 லட்சம் ரூபாய்) வரை விலை போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications