For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் மருத்துவமனை திறந்த நெல்லை பெண் டாக்டர்

By Siva
Google Oneindia Tamil News

துபாய்: துபாய் அல் கூஸ் பகுதியில் காலிதா மெடிக்கல் சென்டர் திறப்பு விழா 10.09.2013 அன்று மாலை சிறப்புற நடைபெற்றது.

திறப்பு விழாவிற்கு வருகை தந்த அனைவரையும் மருத்துவ நிலைய இயக்குநர் டாக்டர் காலிதா கானம் மற்றும் அவரது கணவர் சேக் அப்துல் அஜீஸ் வரவேற்றனர்.

ஈ.டி.ஏ மெல்கோ எக்சிகியூட்டிவ் டைரக்டர் அஹமது மீரான் தலைமையில் மருத்துவ நிலையத்தை ஸ்பான்சர் ஹுசைன் அப்துல் ஜப்பார் தாவூத் சல்மான் திறந்து வைத்தார். ஈ.டி.ஏ மெல்கோ டைரக்டர் ஏ.எஸ்.ஏ. பஷீர் முன்னிலை வகித்தார். பல முக்கிய காப்பீட்டு நிறுவன மருத்துவர்கள், ஈடிஏ மெல்கோ ஊழியர்கள் மற்றும் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

ஆலிம் ஹபீபுர் ரஹ்மான் மஹ்லரி, ஆலிம். கலீல் ரஹ்மான் பிலாலி ஆகியோரின் துஆவுடன் திறப்பு விழா இனிதே நிறைவு பெற்றது. விழா நிகழ்ச்சிகளை என்ஜினியர். சேக் தாவூத், துபாய் உலக நகைச்சுவையாளர் மன்ற தலைவர் 'ரவணை' முகைதீன் பிச்சை ஆகியோர் சிறப்பாக செய்திருந்தார்கள்.

TN doctor opens a hospital in Dubai

டாக்டர் காலிதா கானம் திருநெல்வேலி பேட்டையைச் சேர்ந்தவர். பொது மற்றும் மகப்பேறு மருத்துவத்தில் சிறந்த அனுபவம் பெற்றவர். லண்டனில் மருத்துவ மேற்படிப்பு படித்தவர். அல் கூஸ் பகுதியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு குறிப்பாக தமிழ் மக்களுக்கு இம்மருத்துவ நிலையம் குறைந்த கட்டணத்தில் சிறப்பானதொரு மருத்துவ சேவையினை வழங்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Doctor Khalida Khanam, a native of Tirunelveli has opened a hospital in Dubai. She has promised to provide medical assistance to the Tamils there at a low cost.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X