துபாய் மருத்துவமனையில் 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழர்: தமிழக அரசு உதவ முன்வருமா?

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் மருத்துவமனையில் கடந்த 9 மாதமாக கோமாவில் இருக்கும் தமிழருக்கு உதவி செய்யுமாறு துபாய் ஈமான் அமைப்பு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக துபாய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடராஜன் ராமலிங்கம் (41) தற்பொழுது கோமாவில் உள்ளார்.

அவர் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் உள்ளனர். மற்றொரு மகன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கும் போது இறந்துவிட்டார்.

மருத்துவ நிர்வாகம் முயற்சிகள் பல மேற்கொண்டும் நடராஜன் ராமலிங்கம் கோமாவில் இருந்து திரும்பவேயில்லை. எனவே மருத்துவமனை நிர்வாகம் அவரை தாயகத்திற்கு அனுப்பி வைக்க அவரது கம்பெனிக்கு அறிவுறுத்தியுள்ளது.

கம்பெனி ஆட்கள் துபாயில் சாதி, சமய வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு சமுதாயப் பணியில் ஈடுபட்டு வரும் ஈமான் அமைப்பினை அணுகினர்.

TN worker in comatose in Dubai hospital: Will ADMK govt. help him?

அவரது குடும்பம் ஏழ்மையின் காரணமாக வாடகை கொடுக்கக் கூட வசதியின்றி தெரிந்தவர்கள் வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை வீட்டுக்கு கூட்டிச் சென்று மருத்துவ சிகிச்சை அளிக்க இயலாத நிலையில் அவரது குடும்பத்தினர் இருந்து வருகின்றனர்.

எனவே தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தமிழக மருத்துவமனையில் அவரை அனுமதிக்க உதவிட துபாய் ஈமான் அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

இப்பணியில் உதவிட விரும்பும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் 00971 50 467 43 99 / 00971 50 51 96 433 ஆகிய எண்களில் அல்லது [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+