‘டொம்டாட்டோ’: ஒரே செடியில் மேலே ‘தக்காளி’,வேரில் ‘உருளை’ விளையும் விநோதம்
லண்டன்: ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும் வண்ணம் இங்கிலாந்தில் புதிய செடி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை தற்போது கண்டறிந்துள்ளது.
அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.

நம்பினால், நம்புங்கள்....
தக்காளி செடி போன்ற தோற்றத்தில் தக்காளி காய்த்துக் குலுங்கும், இச்செடியின் வேரில் உருளைக் கிழக்கு கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்.

டொம்டாட்டோ...
ஆனால், உண்மை அது தான். டொம்டாட்டோ என பெயரிடப்பட்டுள்ள இச்செடி, ஒரே நேரத்தில் உருளையையும், தக்காளியையும் பயிர் செய்யும் திறன் கொண்டது.

கடினமான காரியம்....
இந்த விநோதச் செடி குறித்து தாம்சன் அண்ட் மார்கன் நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், ‘இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.

இயற்கையான முறையில்...
மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.

ஒரே தொட்டியில்....
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.

விவசாயிகளுக்கு லாபம்...
இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.

ருசியான விளைச்சல்....
மேலும், இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications