பொரித்த பூச்சிகளையும் புழுக்களையும் லபக் லபக் என முழுங்கிய சுற்றுலாப்பயணி! உறைந்த பார்வையாளர்கள்!
தங்கக்கட்டியை பெற ஒன்றேகால் கிலோ பூச்சியை ஒரு சுற்றுலாப் பயணி 5 நிமிடத்தில் சாப்பிட்டுள்ளார்.
ஷாங்காய்: சீனாவில் தங்கக்கட்டியை பெற ஒன்றேகால் கிலோ பூச்சியை 5 நிமிடங்களில் ஒரு சுற்றுலாப் பயணி லபக் லபக்கென முழுங்கியுள்ளார். இதனை பார்த்த பார்வையாளர்கள் உறைந்து போயினர்.
பொரித்த பூச்சிகள், புழுக்கள், பாம்பு சூப் ஆகியவை சீனாவில் மிக பிரபலம். அதேபோல் வித்தியாசமான விளையாட்டு போட்டிகளும் அங்கு மிக பிரபலம்.
இந்நிலையில் புழு பூச்சிகளுக்கு பெயர் போன யுனான் மாகாணத்தில் ஒரு வித்தியாசமான போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதாவது அரை கிலோ தங்கக்கட்டியை பரிசாக அறிவித்திருந்த தனியார் நிறுவனம் ஒன்று இதற்காக வினோத நிபந்தனை ஒன்றையும் விதித்தது.

பொரித்த பூச்சி புழுக்கள்
அதாவது 5 நிமிடத்தில் அதிகளவு பூச்சிகளை யார் சாப்பிடுகிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர் என்பதாகும். இதற்காக போட்டிக்களத்தில் வெட்டுக்கிளி பூச்சிகளும், புழுக்களும் பொரித்து குவித்து வைக்கப்பட்டிருந்தது.

லபக் லபக் என..
இதில் ஏராளமானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர். அவர்களில் பெங் என்ற சுற்றுலாப் பயணியும் கலந்துகொண்டார். தங்கத்தை வெல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் அந்த நபர் பொரித்தத புழுக்களையும் பூச்சிகளையும் லபக் லபக் என அள்ளி விழுங்கினார்.

உறைந்த பார்வையாளர்கள்
இதனைக் கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். 5 நிமிடத்திற்குள் ஒன்றேகால் கிலோ பூச்சிகளையும் புழுக்களையும் அவர் விழுங்கியுள்ளார்.

தங்கக்கட்டிக்காக..
தங்கம் என்றால் பெண்கள்தான் அதிக ஆசைப்படுவார்கள் என கூறப்படுவதுண்டு. ஆனால் தங்கக்கட்டியை பெற ஆண் ஒருவர் பூச்சிகளையும் புழுக்களையும் அள்ளி சாப்பிட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Image Source: ECNS / ChinaNews


Click it and Unblock the Notifications
