அமெரிக்கா: தொடர்ந்து 87 மணிநேரம் டி.வி. பார்த்து கின்னஸில் இடம் பிடித்த மூவர்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேர் தொடர்ந்து 87 மணி நேரம் டிவி நிகழ்ச்சிகளை ரசித்து சாதனைப் புத்தகமான கின்னஸில் இடம் பிடித்துள்ளனர்.

சாதனை செய்வதற்கு மன உறுதியும், விடாத முயற்சியும் மட்டுமே அவசியம்.அந்த வகையில், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறும் முயற்சியாக அமெரிக்காவில் தொடர்ந்து டிவி பார்க்கும் போட்டி ஒன்று நடை பெற்றது.

இதில், தொடர்ந்து 87 மணி நேரம் டிவி பார்த்துக் கொண்டிருந்த 3 பேர் வெற்றி பெற்று, அவர்களாது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

டிவி பார்க்கும் போட்டி....

டிவி பார்க்கும் போட்டி....

அமெரிக்க நெவாடாவின் லாஸ்வேகாஸ் மாநாட்டு மையத்தில் வைத்து இப்போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட டான் ஜோர்டன், ஸ்பென்சர் லார்சன், கிரிஸ் லாப்லின் என்ற மூன்று பேர் தொடர்ந்து 87 மணி நேரம் டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களித்தனர்.

ஓய்வு...

ஓய்வு...

கின்னஸ் விதி முறைகளின் படி அவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஐந்து நிமிடங்கள் என ஓய்வு அளிக்கப்பட்டது. பாத்ரூம் செல்வதற்காக அந்த நேரத்தை அவர்கள் பயன் படுத்திக் கொண்டனர்.

சாப்பிடலாம், ஆனா தூங்கக் கூடாது

சாப்பிடலாம், ஆனா தூங்கக் கூடாது

டிவி நிகழ்ச்சிகளை பார்க்கிறபோது சேனல்களை மாற்றிக்கொள்ளவும், சாப்பிட மற்றும் குளிர்பானங்கள் அருந்த மட்டும் அனுமதி அளிக்கப் பட்டது. அவர்கள் வேறு ஏதேனும் படிக்கவோ அல்லது தங்களுக்குள் பேசிக் கொள்ளவோ அனுமதிக்கப் படவில்லை.

நேரடி நிகழ்ச்சி...

நேரடி நிகழ்ச்சி...

போட்டியாளர்கள் மூவரும் டிவி பார்க்கும் நிகழ்ச்சியில் பங்கு பெற்றது நேரடி நிகழ்ச்சியாக ஒளிபரப்பப்பட்டது. இதனால், மக்கள் அவர்களைக் கண்காணித்தனர். அவ்வப்போது அவர்களது உடல்நிலையும் மருத்துவர்களால் சோதித்தறியப் பட்டது.

வெற்றி... வெற்றி... வெற்றி...

வெற்றி... வெற்றி... வெற்றி...

போட்டியில் கலந்து கொண்ட மூன்று பேரும் தொடர்ந்து 5 நாட்களில் 87 மணி நேரம் தூங்காமல் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தனர். அதனைத் தொடர்ந்து முந்தைய சாதனை முறியடிக்கப் பட்டதாகக் கூறி, இந்த சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

முந்தைய சாதனை....

முந்தைய சாதனை....

இதற்கு முன்னர், அமெரிக்காவை சேர்ந்த கேரின் ஷ்ரீவ்ஸ் மற்றும் ஜெரேமியா பிராங்கோ என்ற இருவர் தொடர்ந்து 86 மணிநேரம் 37 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்த்ததே கின்னஸ் சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+