சீன அதிபர் ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திப்பு! 6 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மீட்டிங்
புசான்: தென் கொரியாவின் புஷான் நகரில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டை முன்னிட்டு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று நேருக்கு நேர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஆறு ஆண்டுகள் கழித்து இந்த இரு நாட்டு தலைவர்கள் சந்தித்துப் பேசியுள்ளது சர்வதேச அளவில் பெரும் கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். இந்தநிலையில் 5 நாட்கள் பயணமாக டிரம்ப் ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இது அவருடைய முதல் ஆசிய நாடுகள் பயணம். தற்போது தென்கொரியாவில் அதிபர் டிரம்ப் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு புஷான் நகரில் நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார் டிரம்ப்.

புஷான் நகரில் நாளை தொடங்க உள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உலக பொருளாதாரம், வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.
இன்று புஷான் விமான நிலையத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்தனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே நடந்த இந்த சந்திப்பின்போது, இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி வணக்கம் தெரிவித்துக் கொண்டனர். பின்னர் சிறிது நேரம் இருவரும் பேசியுள்ளனர். இருநாடுகளின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.
பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில், சீன அதிபர் ஜி ஜின்பிங், உலகம் முழுவதும் போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்த முயல்கிற டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு நாங்கள் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறோம் எனக் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகக்கூடும் எனக் கூறப்படுகிறது.
சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பேச்சுவார்த்தை மூலம் உலக பொருளாதார சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
-
$300 பில்லியன் கொடுக்க முடியாது.. டிரம்ப் திட்டவட்டம்! ஈரான் முடிவு என்ன? அமைதி ஒப்பந்தம் ஏற்படுமா? -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
இனி ஹார்முஸ் முழுக்க ஈரானுக்கு தான்.. டிரம்பே சொல்லிட்டாராம்.. குத்தாட்டம் போடும் ஈரான் மக்கள்.. ஏன்? -
பஞ்சாயத்து ஓவர்.. அமெரிக்கா-ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம்! டிரம்ப் சொன்ன குட் நியூஸ் -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
நெதன்யாகு சாயம் வெளுத்தது.. ஈரான் நினைத்தால் இஸ்ரேல் 2 மணிநேரத்தில் காலி.. டிரம்ப் பேச்சால் ஷாக்! -
மீண்டும் குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. டிரம்புக்கு தலைவலியாக மாறிய பெஞ்சமின் நெதன்யாகு! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஈரானுடன் ராசியான டிரம்ப்.. ஏன் இந்த திடீர் மனமாற்றம்..? அமெரிக்காவில் வெடித்த பூகம்பம்! இதுதான் உண்மை! -
டிரம்ப்-ன் 80வது பிறந்தநாள்.. சண்டையில் துவங்கி சண்டையில் முடிந்தது.. எப்படி? -
ஈரான் போரில் யாருக்கு வெற்றி..? குண்டை தூக்கிப்போட்ட இஸ்ரேல்..! குழப்பத்தில் டிரம்ப்! -
இஸ்ரேலை கழற்றிவிட நேரம் வந்தாச்சு.. டிரம்ப் எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. நெதன்யாகு ஷாக்!












Click it and Unblock the Notifications