காசாவில் போர் நிறுத்தம்.. தேதியை அறிவித்த டிரம்ப்! சொன்னபடி நடக்குமா?
வாஷிங்டன்: காசா மீது தொடர்ச்சியான தாக்குதலை இஸ்ரேல் நடத்தி வரும் நிலையில், போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியிருந்தார். இந்த போர் நிறுத்தம் இரு தரப்பிலும் விரைவில் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், அடுத்த வாரத்தில் போர் நிறுத்தம் ஏற்படும் என்றும் டிரம்ப் தற்போது அறிவித்திருக்கிறார்.
கடந்த 20 மாதங்களாக இரு தரப்பும் போரில் ஈடுபட்டு வருகின்றன. அமெரிக்க உதவியுடன் கிடைக்கும் ஆயுத பலத்தால், காசவை இஸ்ரேல் மொத்தமாக சிதைத்திருக்கிறது. 63,000 பேர் வரை இந்த போரில் இஸ்ரேல் கொலை செய்திருக்கிறது. உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும் குழந்தைகளும்தான். போர் நிறுத்தம் தொடர்பாக பலமுறை ஐநா சபையில் வலியறுத்தியபோதும் தீர்மானங்கள் இயற்றப்பட்டபோதும் கூட அமெரிக்காவும் இஸ்ரேலும் இதை மதிக்கவில்லை.

தற்போது டிரம்ப் போர் நிறுத்தம் தொடர்பாக அழைப்பை விடுத்திருக்கிறார். இதற்கு பாலஸ்தீனம் தரப்பிலிருந்து பாசிட்டிவ் சிக்னல் கிடைத்திருக்கிறது.
முதலில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இந்த பேச்சுவார்த்தைக்கு நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று பாலஸ்தீனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைகிறது எனில், உடனடியாக போருக்கு போக கூடாது என்றும் பாலஸ்தீனம் தர்ப்பில் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. மறுபுறம் அமெரிக்கா விதித்த நிபந்தனைகள் தொடர்பாக எந்த உத்தரவாதத்தையும் பாலஸ்தீனம் கொடுக்கவில்லை.
இது குறித்து பாலஸ்தீன அதிகாரி ஒருவர் பிபிசி செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளார். அதில், அமெரிக்காவின் போர் நிறுத்த அழைப்பை பாலஸ்தீனம் ஏற்றுக்கொண்டிருப்பதை உறுதி செய்திருக்கிறார். இஸ்ரேலும் போர் நிறுத்தம் தொடர்பான நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டிருக்கிறது. எனவே அடுத்த வாரத்தில் இரு தரப்பும் போர் நிறுத்தத்திற்கு ரெடியாகவிடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலிடம் உள்ள நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் விடுதலை செய்யப்படுவார்கள். அதேபோல, ஹமாஸ், தங்கள் வசம் உள்ள சில இஸ்ரேலியர்களை விடுதலை செய்யும்.
இந்த போர் நிறுத்த ஒப்பந்ததில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டவுடன் ஐ.நா மற்றும் செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் பங்களிப்புடன் போதுமான மனிதாபிமான உதவிகள் உடனடியாக காஸாவிற்குள் செல்ல வேண்டும். இதற்கு இஸ்ரேல் எப்படி ஒப்புக்கொள்ளும் என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
இப்போது காசாவில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆதரவுடன் காஸா மனிதாபிமான அறக்கட்டளை (GHF) மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. ஆனால் இந்த அமைப்பு உணவை விநியோகிக்கும் இடத்தில் இஸ்ரேல் ராணுவம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இந்த ராணுவம் உணவுவு வாங்க வரும் பொதுமக்கள் மீது கொலைவெறி தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் 500க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். எனவே, இந்த சர்ச்சைக்குரிய விநியோக முறை உடனடியாக முடிவுக்கு வர வேண்டும் என்று ஹமாஸ் வலியுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications