ஈரான் கதை முடிந்தது? 'Mark 84 பாம்'.. டிரம்ப் வெளியிட்ட போட்டோவால் ஈரான் மக்கள் அலறல்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானுடனான அமைதி ஒப்பந்தத்திலிருந்து முழுமையாக பின்வாங்கும் நிலைக்கு வந்துள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சனிக்கிழமை இரு நாடுகளுக்கு மத்தியிலான போர் நிறுத்த அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக வெளியான செய்தியால் ஒட்டுமொத்த முதலீட்டாளர்களும் திங்கட்கிழமை வர்த்தகத்திற்கு காத்திருந்தனர். நினைத்தபடியே இன்று பெட்ரோல், டீசல் விலை 5 சதவீதம் வரையில் குறைந்துள்ளது.
ஆனால் ஒரே இரவில் மொத்த கதையும் மாறியுள்ளது. டிரம்ப் அரசு பாகிஸ்தான் வாயிலாக ஈரானுக்கு இறுதி அமைதி ஒப்பந்த திட்டத்தை கொடுத்தது. ஈரான் வைத்த கண்டிஷன்களை இந்த ஒப்பந்தத்தில் சேர்க்காவிட்டால் ஒப்பந்தம் முழுமையாக மறுக்கப்படும் என ஈரான் தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானுக்கு வளைந்து கொடுக்க வேண்டாம்
இந்த நிலையில் தான் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பிற நாட்டு ஆதரவு நாடுகள், டிரம்ப்-ஐ ஈரானின் கோரிக்கையை ஏற்க வேண்டாம் என தீவிரமாக அழுத்தம் கொடுத்துள்ளது. இதனால் டிரம்ப் ஈரானுடான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து முழுமையாக பின்வாங்கியுள்ளதாக டிரம்பின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் இருந்து டிரம்ப் பின்வாங்க முடிவு செய்துள்ளார் என்ற செய்தி வெளியான சில மணி நேரங்களில் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அமெரிக்க பைட்டர் ஜெட் விமானத்தில் மார்க் 84 இணைக்கப்பட்டுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
மார்க் 84 பாம்
இந்த பிரம்மாண்ட மார்க் 84 குண்டின் மீது டிரம்ப்-ன் பிரபலமான Thank you for your attention to this matter என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த பதிவு உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் உடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திட தயாராகி இருக்கிறது என்றால் எதற்காக இந்த மிரட்டல் தொனியில் புகைப்படம்?
ஈரான் தரப்பில் இருந்து ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்கா ஹார்முஸ் வழித்தடத்தில் கடற்படை முடக்கத்தை தொடர்ந்தால் அமைதி ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று ஈரான் தெரிவித்துள்ளது.

100 பில்லியன் டாலர் சொத்து
குறிப்பாக ஈரானின் 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள தனது முடக்கப்பட்ட சொத்துக்களையும் உலக நாடுகளில் இருந்கு விடுவிக்க வேண்டிய கோரிக்கையை அமெரிக்கா அணு சார்ந்த சலுகைகளுடன் இணைக்க முயற்சிப்பதை ஈரான் மறுத்துள்ளது. இந்த 100 பில்லியன் டாலர் சொத்துக்கள் மீதான தடையை நீக்குவதால் அணுசக்தி கண்டிஷன்களை ஏற்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஓவர்நைட்டில் மாறிய கதை
வெள்ளை மாளிகை தரப்பிலும் நேற்று பெரும்பாலும் பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்று கூறிய நிலையில் இருந்து இப்போது ஒப்பந்தம் இன்னும் தாமதமாகலாம் என்று டிரம்ப் பின்வாங்கியுள்ளது. டிரம்ப் தானே ட்ரூத் சோஷியலில் ஒப்பந்தம் விரைவில் வருகிறது என்று சொன்னதை மாற்றி, நேரம் நமக்கு சாதகமாக உள்ளது என்றும், தடை முழுமையாக நீடிக்கும் என்றும் பதிவிட்டுள்ளார். ஈரான் தரப்பும் இந்தத் கடற்படை தடையை முழுமையாக நீக்கினால் தான் எந்த ஒப்பந்தத்துக்கும் கையெழுத்திட முடியும் என்று ஈரான் தெளிவாகக் கூறியுள்ளது.
டிரம்ப்-க்கு நெருக்கடி
டிரம்பின் ஈரான் உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதை பார்க்கும் போது, இஸ்ரேல் மற்றும் அதன் பிற ஆதரவாளர்களின் விருப்பத்தை ஏற்று நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளதை காட்டுகிறது. இதேபோல் ஈரான் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடாவிட்டால் மார்க் 84 குண்டு மூலம் தாக்குதல் நடத்துவது உறுதி என்ற நிலைக்கு வந்துள்ளது.
மேலும் ஈரானின் எந்த கோரிக்கையும் அமெரிக்க தரப்பில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்பது ஈரானின் முக்கிய பிரச்சனையாக ஹார்முஸ்-ல் கன்ட்ரோல், அணுசக்தி மற்றும் யுரேனியம் ஆகியவற்றில் எவ்விதமான சமரசமும் இல்லை என்பது தான் ஈரானின் நிலைப்பாடு. இதோடு இதர சில கோரிக்கைகளையும் ஈரான் வைத்துள்ளது.
ஈரான் மக்களின் அச்சம்
ஈரான் தரப்பில் இருந்து வரும் எச்சரிக்கைகள் மற்றும் அமெரிக்காவின் பின்வாங்கல் ஆகியவை அடுத்த சில நாட்களில் மேலும் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிரம்ப்-ன் மார்க் 84 பாம் போட்டோவால் ஈரான் மக்களும் பீதியில் உள்ளனர், இந்த குண்டு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என பயத்தில் உள்ளனர்.
இதேபோல் தற்போதைய நிலைப்பாடு தொடர்ந்தால் ஈரான் போர் மீண்டும் பெரும் தாக்குதலுக்கு உண்டாகும் என்ற அச்சமும் உள்ளது.












Click it and Unblock the Notifications