அவரை விட்டுடுங்க.. ஊழல் வழக்கிலிருந்து நெதன்யாகுவை விடுவிக்கனுமாம்! டிரம்ப் வலியுறுத்தல்
வாஷிங்டன்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது ஊழல் உட்பட 3 குற்ற வழக்குகள் விசாரணையில் இருக்கின்றன. இந்த வழக்கிலிருந்து அவரை விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
நெதன்யாகு பிரதமராக தொடர்வதால் வழக்கு விசாரணையிலிருந்து தொடர்ந்து வாய்தா வாங்கி ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார். ஒருவேளை அவர் தனது பதவியை இழந்தால் உடனடியாக கைது செய்யப்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இந்நிலையில் அவருக்கு எதிரான விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், டிரம்ப் சப்போர்ட்டுக்கு வந்திருக்கிறார்.

வழக்கு எண் 1000, 2000 மற்றும் 4000 என மூன்று வழக்குகள் நெதன்யாகு மீது இருக்கிறது. இரண்டு வழக்குகள் அவர் பிரதமராக இருந்தபோது செய்த முறைகேடுகளுக்காகவும், ஒரு வழக்கு அவர் அமைச்சராக இருந்தபோது ஊழலில் ஈடுபட்டதற்காகவும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது தொடர்பான விசாரணை கடந்த 26ம் தேதி டெல் அவிவ் நீதிமன்றத்தில் வந்தது. அப்போது நெதன்யாகு தரப்பில் ஆஜராகியிருந்த வழக்கறிஞர்,
"ஐயா, எனது கட்சிக்காரர் ஈரான் உடனான போர் விவகாரங்களில் பிஸியாக இருக்கிறார். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட மேட்டர் இது. அதில் முழு கவனம் செலுத்தி வருவதால்.. வாய்தா கொடுத்து ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்" என்று கேட்டிருந்தார். ஆனால், நீதிமன்றம் மறுத்துவிட்டது. "இந்த காரணத்தையெல்லாம் தூக்கிட்டு வராதீங்க. விசாரணையில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க இது போதுமான காரணம் இல்லை" என்று கூறி உடனடியாக ஆஜராக சொல்லிவிட்டது.
இப்படி இருக்கையில்தான் டிரம்ப், தனது ஆருயிர் தோழன் நெதன்யாகுவுக்கு சப்போர்ட் செய்திருக்கிறார். என் செல்லத்துக்கு எதுவும் தெரியாது, அவரை விட்டுடுங்க என்கிற தொனியில் பேசியிருக்கிறார். தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில், "நெதன்யாகுவுக்கு எதிரான ஊழல் வழக்கு, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.பிபி-க்கு (நெதன்யாகுவுக்கு டிரம்ப் வைத்த செல்ல பெயர்தான் 'பிபி') எதிரான நடவடிக்கைகள் மோசமானவை. இதிலிருந்து அவர் விடுவிக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
இப்படி சொல்வது இது முதல் முறை கிடையாது. ஏற்கெனவே பல முறை இவ்வாறு கூறியிருக்கிறார். "இஸ்ரேலில் பிபி-க்கு எதிராக நடக்கும் விஷயங்கள் மிகவும் மோசமானவை. அவர் ஒரு போர் வீரர். அமெரிக்காவுடன் இணைந்து ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தலை அகற்ற சிறந்த முறையில் பணியாற்றிய பிரதமர் அவர். பணய கைதிகள் மீட்பது உட்பட பல விஷயங்களில் அவர் ஹமாஸுடன் ஒரு ஒப்பந்தத்தை பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இப்படிப்பட்ட பிரதமரை நாள் முழுவதும் நீதிமன்றத்தில் உட்கார வைப்பது எப்படி சாத்தியம்? அதுவும் சிகரெட், Bugs Bunny பொம்மை போன்ற அற்பமான விஷயங்களுக்காக?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
வெளிநாட்டு சிகரெட்டுகள், விலை உயர்ந்த பரிசு பொருட்களை பெற்றதாகவும் நெதன்யாகு மீது குற்றச்சாட்டு இருக்கிறது. குற்றம் சாட்டப்பட்டால் அது உண்மையில்லை என்று நெதன்யாகு நிரூபிக்கட்டுமே! அவர்தான் பிரதமர் ஆயிற்றே! அவரால் கைகூடாத காரியம் ஏதும் உண்டோ! அப்புறம் எதுக்கு மீட்பர் போல டிரம்ப் சீனுக்குள் வருகிறார்?
வழக்கு விசாரணையெல்லாம் இஸ்ரேல் நீதிமன்றம் பார்த்துக்கொள்ளும். முதலில் நெதன்யாகுவை ஆஜராக சொல்லுங்குங்கள் என்று உள்நாட்டிலேயே கலக குரல்கள் எழுந்து வருகின்றன.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications