குட்டையை குழப்பும் இஸ்ரேல்.. ஈரானிடம் கெஞ்சும் டிரம்ப் அரசு.. இறுதிக்கட்டத்தில் போர்!
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான மோதல் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது புதிய பதற்றம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் அமைதி ஒப்பந்தம் கோரி தினசரி பல முறை தொடர்பு கொண்டாலும், ஈரான் அதை நிராகரித்து வருகிறது. இந்த நிலையில், இஸ்ரேல் தரப்பில் டிரம்ப் மீது கடுமையான அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மூன்று மாதங்களாக நீடித்த மோதலுக்கு தற்காலிக தீர்வு காணும் வகையில் 60 நாட்கள் போர்நிறுத்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஈரானின் அணு ஆயுதத் திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளவும் இந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளன. இந்த முன்னேற்றம் உலகப் பொருளாதாரத்துக்கு நிம்மதியை அளித்துள்ளது.

ஆனால், இந்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் இஸ்ரேல் மாறுத்து திட்டத்தை முன்வைத்து அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய டிரம்ப்-ஐ தூண்டி வருகிறது.
ஈரானின் கடுமையான நிலைப்பாடு
ஈரான் தரப்பில் இருந்து வரும் தகவலின்படி, டிரம்ப் நிர்வாகம் ஒப்பந்தம் கோரி தினசரி பல்வேறு வழிகள் மூலம் தொடர்பு கொண்டு வருகிறது. ஆனால், ஈரான் தனது நிபந்தனைகள் முழுமையாக ஏற்கப்படும் வரை எந்த பதிலும் அளிக்காது என்ற உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது.
ஈரான் நாடாளுமன்ற தலைவர் கலிபாப் உடன் நெருக்கமான வட்டாரங்கள், "ஈரான் டிரம்ப் நிர்வாகத்தின் மீது எந்த நம்பிக்கையும் வைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளன.
மேலும், இந்த வார இறுதியில் நிதிச் சந்தைகள் மூடும் வரை காத்திருந்து டிரம்ப் ஒப்பந்தத்தை ரத்து செய்து தாக்குதலை மீண்டும் தொடங்கலாம் என்ற அச்சமும் ஈரான் தரப்பில் நிலவுகிறது.
இஸ்ரேலின் தீவிர அழுத்தம்
இதேவேளையில், இஸ்ரேல் அதிகாரிகள் டிரம்ப் நிர்வாகத்தை இரகசியமாக அணுகி, ஈரானுடனான பேச்சுவார்த்தைகளை முழுமையாக கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றனர். ஈரான் பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக இருக்கும் கலிபாப்-ஐ கொலை செய்யவும், ஈரானின் எண்ணெய் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளை உடனடியாக தாக்கி "ஆட்சி மாற்றம்" (Regime Change) ஏற்படுத்தவும் இஸ்ரேல் வலியுறுத்துவதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் தரப்பு, ஈரானின் பதிலடியால் வளைகுடா பகுதியில் ஏற்படும் பொருளாதார பாதிப்புகளைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளது.
உலகப் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
ஈரான் - அமெரிக்க மோதல் தொடர்ந்தால், உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு, பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே மூன்று மாதங்களாக நீடித்த இந்த மோதல் உலகப் பொருளாதாரத்தை பெரிதும் பாதித்துள்ளது.
தற்போதைய சூழல் மிகவும் முக்கியமானது, ஒருபுறம் அமெரிக்கா ஒப்பந்தத்தை விரும்பினாலும், இஸ்ரேலின் அழுத்தம் மற்றும் ஈரானின் கடுமையான நிலைப்பாடு காரணமாக பேச்சுவார்த்தைகள் சிக்கலில் உள்ளன.
அடுத்த சில நாட்களில் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்படுமா அல்லது மீண்டும் மோதல் தீவிரமடையுமா என்பதை உலகம் உன்னிப்புடன் கவனித்து வருகிறது.
-
மீண்டும் வெடிக்கும் போர்.. இரவோடு இரவாக பாய்ந்த ஏவுகணைகள்! அமெரிக்க தளங்களை குறிவைத்து தூக்கிய ஈரான் -
73 ஏவுகணை தாக்குதல்.. 656 ட்ரோன்.. சைரன் சத்தம்.. பெண்கள், குழந்தை கதறல்.. உக்ரைனை துவம்சம் செய்த ரஷ்யா! -
ஆட்டத்தை மொத்தமாக கலைத்த இஸ்ரேல்.. டிரம்ப்-க்கு செக்.. போருக்கு ரெடியாகும் ஈரான்! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications