ஈரானில் அணு ஆயுதம்? சொந்த நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்த டிரம்ப்! செய்தியாளர் சந்திப்பில் ஜர்க்
வாஷிங்டன்: "என்னங்க, உங்க நாட்டு உளவுத்துறையே, ஈரானில் அணு ஆயுதம் இல்லைன்னு சொல்லிடுச்சு, அப்புறம் எதுக்கு இஸ்ரேலுக்கு சப்போர்ட் செய்றீங்க?" என நேற்று பத்திரிகையாளர்கள் டிரம்பிடம் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த டிரம்ப், உளவுத்துறை தப்பு செய்துவிட்டது என்று கூறியுள்ளார்.
குறிப்பாக, உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்டின் செயல்பாட்டை, அவர் கடிந்து கொட்டியுள்ளார்.

நேற்று பத்திரிகையாளர்களுக்கு டிரம்ப் பேட்டியளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், "ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்குகிறது என்பதற்கு உங்களிடம் என்ன ஆதாரம் உள்ளது? உங்களுடைய உளவுத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகிறார்களே?" என்று கேள்வி எழுப்பினார். இதை சற்றும் எதிர்பார்க்காத டிரம்ப், ஜர்க் ஆனார். ஆனால், உடனே சுதாரித்துக்கொண்டு, "அப்படியா? என் உளவுத்துறை தவறு செய்திருக்கிறது. உங்களுக்கு இதை சொன்னது யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
பதிலுக்கு பத்திரிகையாளர், "உங்கள் உளவுத்துறை தலைவர் துல்சி கப்பார்ட்தான் இதை சொன்னார்" என்று பதிலளிக்க, கொஞ்சம் கூட காத்திராத டிரம்ப், "அவர் தவறாக கூறியிருக்கிறார்" என்று ரிப்ளை கொடுத்திருக்கிறார். மேலும், "ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்கும் இறுதி கட்டத்தில் உள்ளது. உளவுத்துறையின் முடிவு இதற்கு எதிராக இருந்தாலும், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை" என்று தெரிவித்திருக்கிறார்.
இந்த சம்பாஷனைகள் தன்னை நோக்கி திரும்புவதை உணர்ந்த துல்சி, "ஈரான் சில வாரங்கள் அல்லது மாதங்களில் அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் இருக்கிறது என்று அமெரிக்க உளவுத்துறை கண்டறிந்துள்ளது. அவர்கள் அதை செய்ய முடிவு செய்தால் உடனடியாக ஆயுதத்தை உருவாக்க முடியும். அது நடக்கக்கூடாது என்பதில் அதிபர் டிரம்ப் தெளிவாக இருக்கிறார், நானும் அதை ஒப்புக்கொள்கிறேன்" என்று சேம் சைட் கோல் அடித்திருக்கிறார்.
டிரம்ப்பும், அமெரிக்க உளவுத்துறையும் என்னதான் இப்படி மாறி, மாறி உருட்டினாலும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கிறது என்பதற்கு இப்போது வரை வலுவான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. மட்டுமல்லாது, அமெரிக்க அதிபர் ஒருவர், நாட்டின் உளவுத்துறையை கடித்து வைத்திருப்பது சர்வதேச அளவில் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
ஈரான் மீது நாங்கள் தாக்குதல் நடத்துவோம் என்று வெளிப்படையாக அமெரிக்கா சொல்லாவிட்டாலும், ஈரானின் அணுசக்தி திட்டத்தை முழுவதுமாக அழிப்பதற்கான இஸ்ரேலின் திட்டத்திற்கு அந்நாடு தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. குறிப்பாக, ஃபோர்டோவ் செறிவூட்டும் ஆலையை அழிப்பது அவசியம் என அமெரிக்காவும் கருதுகிறது.
மலைக்குள் சுமார் 300 மீ ஆழத்தில் இருக்கும் இந்த இடத்தைத் தாக்க, அமெரிக்காவிடம் இருக்கும் 30,000-பவுண்டு (13,000 கிலோ) எடையுள்ள குண்டு மற்றும் அதை எடுத்துச் செல்லும் விமானங்களும் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு மணிநேரத்தில் பதிலடி கொடுத்த ஈரானின் IRGC படை.. ஆடிப்போய் நிற்கும் அமெரிக்கா.. இனி ரொம்ப கஷ்டம்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications