இது கொஞ்சம் ஓவர்தான்! ஆளே இல்லா தீவுகளுக்கு வரி போட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப்! புலம்பும் ஆஸ்திரேலியா

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தப்பாத நாடுகளே இல்லை என சொல்லும் அளவுக்கு சகட்டு மேனிக்கு வரியை போட்டு இருக்கிறார். அப்படித்தான் ஆஸ்திரேலியாவின் ஆளே இல்லாத தீவுகளுக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரி விதித்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஆஸ்திரேலிய பிரதமர், 'டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை எந்த ஒரு அடிப்படையும் லாஜிக்கும் இன்றி உள்ளது. இரண்டு நாடுகள் இடையேயான கூட்டாண்மைக்கு எதிராக உள்ளது' என்று கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், ஏற்கனவே அறிவித்தபடி பரஸ்பர வரியை நேற்று அறிவித்தார். இந்த வரி விதிப்பிற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு பிற நாடுகள் எவ்வளவு வரி விதிக்கிறதோ அதே அளவுக்கு பதிலுக்கு வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் கூறினார். இதன்படி, நேற்று டிரம்ப் பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தினார்.

trump-imposes-10-trade-tariff-on-remote-australian-islands-which-has-no-inhabitant

இந்தியாவுக்கு 26 சதவீத வரி

இந்தியாவை வரி அரசன் என்றும் சர்வதேச அளவில் அதிக வரி விதிக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதாக டிரம்ப் விமர்சித்து வந்த நிலையில், இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 26 சதவீதம் வரியை விதித்துள்ளார். அதே போல சீன பொருட்களுக்கு 34 சதவீதம் வரி விதிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்ட டிரம்ப், இந்த நிகழ்த்துக்காகதான் நெடுநாள் காத்திருந்தோம்.

ஏப்ரல் 2, 2025 அமெரிக்க தொழில்துறையில் முக்கிய நாளாக வரலாற்றில் அறியப்படும். அமெரிக்காவை மீண்டும் செல்வ செழிப்பு மிக்க நாடாக மாற்றும் நாளின் தொடக்காமக இது இருக்கும். அமெரிக்காவின் பொற்காலம் தொடங்குகிறது" என்று கூறினார். அமெரிக்க அதிபர் டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு தப்பாத நாடுகளே இல்லை என சொல்லும் அளவுக்கு சகட்டு மேனிக்கு வரியை போட்டு இருக்கிறார்.

ஆளே இல்லாத தீவுகளுக்கும் வரி

உலக வரைபடத்தில் அதிகம் அறியப்படாத நாடுகளுக்கு கூட டிரம்ப், வரியை விதித்துள்ளார். மொத்தமாக டிரம்பின் வரி விதிப்பு பட்டியலில் 182 நாடுகள் உள்ளன. இதில் ஆளே இல்லாத அண்டார்டிக் தீவு கூட தப்பவில்லை என்பதுதான் சுவாரசியமான ஒன்று.
ஆஸ்திரேலியாவின் பிராந்திய பகுதியாக உள்ள Antarctic தீவுகளில் எரிமலைகளும் பனிகளும் நிறைந்துள்ளன.

எரிமலை தீவிற்கு டிரம்ப் வரி விதித்து இருக்கிறார். இந்த தீவில் மக்கள் யாருமே வசிக்கவே இல்லை. பனிக்கட்டிகளும் பென்குவின்களும் மட்டுமே உள்ள இந்த தீவுக்கும் 10 சதவீத வரியை டிரம்ப் விதித்துள்ளார். உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட தீவுகளாக அறியப்படும் ஹியார்டு மற்றும் மெக்டோனால்டு தீவுகளுக்கு இந்த வரி விதிப்பை டிரம்ப் விதித்துள்ளார். ஆஸ்திரேலியாவின் வெளிப்புற பிராந்தியமாக இது உள்ளது.

லாஜிக் இல்லாமல் உள்ளது

பெர்த் நகரில் இருந்து படகில் சென்றால் இரண்டு வாரங்கள் ஆகும். இந்த தீவில் ஒரு மனிதர் கூட அங்கு சமீப நாட்களில் கால் வைத்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. டிரம்பின் இந்த நடவடிக்கைக்கு உடனடியாக பதிலடி கொடுத்துள்ள ஆஸ்திரேலிய பிரதமர், உலகில் இந்த இடமும் பாதுகாப்பானது இல்லை என்று கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கை எந்த ஒரு அடிப்படையும் லாஜிக்கும் இன்றி உள்ளது. இரண்டு நாடுகள் இடையேயான கூட்டாண்மைக்கு எதிராக உள்ளது.

இது ஒரு நண்பரின் செயல் போல இல்லை. அமெரிக்காவுக்கு பரஸ்பர வரியை ஆஸ்திரேலியா விதிக்காது. கடைசி இடத்திற்கான ரேசில் நாங்கள் இணைய விரும்பவில்லை. அதிக விலை உயர்வு வளர்ச்சியை மந்தப்படுத்தும்" என்றார். ஆஸ்திரேலியாவில் இருந்து, கப்பல் மூலமாக இந்த தீவுக்கு செல்ல 10 நாட்கள் ஆகும். அங்குள்ள கால சூழல் காரணமாக, அந்த தீவில் அதிகம் பென்குவின்களும், பல்வேறு பறவை இனங்களும் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+