என் உயிருக்கு ஆபத்து.. சிங்கப்பூர்ல எனக்கு பாதுகாப்பு இல்லை.. டிரம்ப்பை சந்திக்கும் கிம் புலம்பல்
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள்.
Recommended Video

சிங்கப்பூர்: சிங்கப்பூர் செல்லும் வட கொரிய அதிபர் கிம் ஜாங், தன் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
வட கொரிய அதிபர் கிம் ஜாங்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் வரும் ஜூன் மாதம் 12ம் தேதி சந்திப்பு நடத்த இருக்கிறார்கள். இவர்கள் சிங்கப்பூரில் சந்திப்பு நடத்துகிறார்கள்.
இவர்கள் சந்திப்பிற்காக ஏற்கனவே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

ஆயுதம்
உலக வரலாற்றில் இது முக்கியமான சந்திப்பாக பார்க்கப்படுகிறது. இதில் அணு ஆயுதம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளது. இந்த சந்திப்பில், வடகொரியா அணு ஆயுதங்களை கைவிட முடிவெடுத்துள்ளது. அணு ஆயுதங்களை கைவிடும் முடிவில் கிம் கையெழுத்திடுவார். ஆகவே இந்த சந்திப்பு பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயிர் பயம்
சிங்கப்பூர் செல்லும் வட கொரிய அதிபர் கிம் ஜாங், தன் உயிருக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார். நாளை மாலை இவர் சிங்கப்பூர் சென்றிருப்பார். அங்கு தான் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்று இவர்கள் கூறியுள்ளனர். பல நாடுகள் தன்னிடமே மறைமுகமாக எதிராக உள்ளது. அதனால் எப்போது வேண்டுமானாலும் கொல்லப்படலாம் என்றுள்ளார்.

காரணம் இருக்கிறது
இதற்கு காரணமும் உள்ளது. கிம் பெரிய அளவில் சக்தியுடன் இருந்த போதே, அவரது தம்பி மலேசியாவில் கொல்லப்பட்டார். கிம் ஜோங் நாம் என்ற அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை கொன்றது யார் என்று இப்போதுவரை தெரியவில்லை. அவரை கிம் கொன்று இருப்பாரோ என்ற சந்தேகமும் இருக்கிறது.

பெரிய பாதுகாப்பு
ஆனால் இதன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு அதிகம் அளிக்கப்பட உள்ளது. இதற்காக அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இரு நாட்டு அதிபர்களும் தங்களது தனிப்பட்ட பாதுகாவலர்களை அழைத்து வருகிறார்கள். அதே சமயம் சிங்கப்பூர் சார்பாக அவர்களுக்கு கூர்க்கா பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. சுமார் 500க்கும் அதிகமான கூர்க்காக்கள் இன்றில் இருந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட இருக்கிறார்கள்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications