ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார்! ஆனால் சில கண்டிஷன்கள்.. இறங்கி வந்தது ரஷ்யா
மாஸ்கோ: ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்த டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கினாலும், புதின் இதில் கலந்துக்கொள்ளவில்லை. இந்நிலையில், நேரடி பேச்சுவார்த்தைக்கு புதின் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும், ஆனால் சில நிபந்தனைகள் இருப்பதாக ரஷ்ய வெளியுறவுத்துறை கூறியிருக்கிறது.
இரு தரப்பிலும் அதிபர் மட்டத்தில் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்படும் பட்சத்தில் போர் விரைவில் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை
நேற்று துருக்கியில் இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது. அதில் ரஷ்ய அதிபர் புதின் பங்கேற்க மாட்டார் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே ஜெலன்ஸ்கியும் பங்கேற்கவில்லை. ஆகவே, இரு தரப்பு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. உக்ரைன் சார்பில் ஆஜராகியிருந்த அதிகாரிகளில் பாதி பேர் ராணுவ சீருடைகளில் வந்திருந்தனர். தங்கள் நாட்டின் மீது தொடுக்கப்பட்டிருக்கும் தாக்குதலை நினைவுகூறும் வகையில் ராணுவ உடையை அணிந்து வந்திருப்பதாக கூறியிருந்தனர்.
ரஷ்யாவின் நிபந்தனை
பேச்சுவார்த்தை இரண்டு மணி நேர்த்திற்கும் குறைவாகவே நடைபெற்றது. புதிய உடன்பாடுகள் எதுவும் எட்டப்படவில்லை. பேச தொடங்கிய கொஞ்ச நேரத்திலிலேயே இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் வலுவாக எழ தொடங்கின. போர் நிறுத்தத்திற்காக, குறிப்பிட்ட அளவுக்கு உக்ரைன் நிலப்பரப்பிலிருந்து அந்நாட்டு வீரர்கள் வெளியேற வேண்டும் என்று ரஷ்யா தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் உக்ரைன் இதற்கு ஒப்புக்கொள்ளாததால், பஞ்சாயத்து வெடித்தது.
இரு தரப்புக்கும் இடையில் கடந்த 2022ம் ஆண்டு கடைசியாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் பின்னர் போர் தொடங்கியதால் பேச்சுவார்த்தை ஏதும் நடக்கவில்லை. 3 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் பேச்சுவார்த்தை இது என்பதால், கூடுதல் கவனம் பெற்றிருந்தது.
இறங்கி வந்த புதின்
இந்நிலையில், தற்போது ஜெலன்ஸ்கியுடன் நேரடி பேச்சுவார்த்தைக்கு புதின் தயார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதனை கூறியிருப்பதாக ராய்டர்ஸ் கூறியிருக்கிறது. ஆனால் சில நிபந்தனைகள் இருப்பதாகவும், இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் பேச்சுவார்த்தைக்கு புதின் வருவார் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இருப்பினும், நிபந்தனைகள் என்ன? எதையெல்லாம் உக்ரைன் நிறைவேற்ற வேண்டும்? என்பது பற்றி தெளிவான தகவல்கள் இல்லை.
6 ஆண்டுகளுக்கு பிறகு..
கடந்த 2019ம் ஆண்டு கடைசியாக ஜெலன்ஸ்கி-புதின் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இப்போது பேச்சுவார்த்தை தொடர்ந்தால்,
அதை தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு பிறகு இது அதிபர்களும் சந்திக்குக்கொள்ளும் நிகழ்வாக இது இருக்கும். அதிபர்களே நேரடியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் போர் உடனே நிற்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று சொல்லப்படுகிறது.
போருக்கான காரணம்
உக்ரைன் முன்னாள் சோவியத் நாடுகளில் ஒன்று. சோவியத் உடைந்த பிறகு, உக்ரைன் தனி நாடாக மாறியது. ஆனால் அது இப்போது அமெரிக்காவின் ஆதரவாளராக இருக்கிறது. மட்டுமல்லாது நேட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்து போடவும் முயன்று வருகிறது. எந்த ஒரு நாடு நேட்டோவில் இணைகிறதோடு, அந்நாட்டின் எல்லையில் அமெரிக்க படைகள் நிறுத்தப்படும். உக்ரைனில் நேட்டோ இணைகிறது எனில், அந்நாட்டின் எல்லையில் அமெரிக்க படைகள் நிற்கும்.
இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். எனவேதான் ரஷ்யா இந்த விஷயத்தை கடுமையாக எதிர்த்தது. ஆனால் எதிர்ப்பை பொறுப்படுத்தாத உக்ரைன் நேட்டோவில் இணைய தீவிரம் காட்டியது. இதுதான் போருக்கான தொடக்கப்புள்ளி. இதற்கு எதிராகத்தான் ரஷ்யா போரை தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications