மத்திய கிழக்கில் அச்சுறுத்தலாக நீளும் இஸ்ரேல்.. வரலாற்று ஆதாரம் இதோ! மவுனம் களைவாரா டிரம்ப்?

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: உலகம் முழுவதும் நடக்கும் போர்களை தடுக்க வந்த தேவ தூதனாக தன்னை காட்டிக்கொள்ளும் டிரம்ப், ஈரான் விவகாரத்தில் மட்டும் ஒருதலைப்பட்சமாக நடந்துக்கொண்டிருக்கிறார். இந்த ஆதரவை இஸ்ரேல் எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறது? வரலாறு நெடுக அமெரிக்க ஆதரவுடன் மத்திய கிழக்கில் இஸ்ரேல் கூட்டி வைத்த ஏழரைகள் என்னென்ன? என்பதை இந்த செய்தி விவரிக்கிறது.

Trump Israel Iran US

1. பாலஸ்தீன பிரச்சனையும் இஸ்ரேலும்

இன்று வரை, காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுமார் 60,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும்தான். ஏன் இந்த போர்? ஹமாஸ் அமைப்பு கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதற்கு எதிராகத்தான் போர் என்று இஸ்ரேல் கூறுகிறது. சரி ஏன் ஹமாஸ் தாக்குதல் நடத்த வேண்டும்? ஏனெனில் பாலஸ்தீனத்தின் நிலப்பரப்பை இஸ்ரேல் ஆக்கிரமித்திருந்தது.

இந்த ஆக்கிரமிப்புக்கு எதிராக உலக நாடுகள் எவ்வளவோ கண்டனம் சொல்லியும், இஸ்ரேல் பின் வாங்கவில்லை. இந்த விஷயத்தில் அமெரிக்கா, கிணற்றில் போட்ட கல்லாக சைலன்ட் மோடில் இருந்தது. இதெல்லாம் சேர்ந்துதான் ஹமாஸ் அமைப்பை கையில் ஆயுதங்களை எடுக்க வைத்திருக்கிறது. ஆக, பாலஸ்தீன போருக்கு காரணம் இஸ்ரேல்தான்.

2. 1967 ஆம் ஆண்டு 'ஆறு நாள்' போர்

ஆக்கிரமிப்பு, ஆக்கிரமிப்பு என்று சொல்கிறீர்களே? இஸ்ரேல் அப்படி என்னதான் ஆக்கிரமிப்பை மேற்கொண்டது? என்று கேள்வி எழலாம். இதற்கான தொடக்கப்புள்ளி 1967ம் ஆண்டில் நடந்த போர்தான்.

மேற்குக் கரை, காசா முனை, கிழக்கு ஜெருசலேம், கோலன் குன்றுகள் மற்றும் சினாய் தீபகற்பம் ஆகியவற்றை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதற்கு ரஷ்யா, சீனா என பல நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், அமெரிக்கா மௌன சாமியாராக இருந்தது. அப்புறம் என்ன இஸ்லாமிய நாடுகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே போர் வெடித்தது.

இந்த போர் 6 நாட்கள் வரை நீடித்தது. இஸ்ரேலுக்கு அமெரிக்காவும், இஸ்லாமிய நாடுகளுக்கு சோவியத் ரஷ்யாவும் ஆயுத உதவிகளை செய்தது. இதில் இஸ்ரேல்தான் வெற்றி பெற்றது. ஆனால் இஸ்லாமிய நாடுகள் கொடுத்த பதிலடியை இஸ்ரேல் தனது வரலாற்றிலேயே மறக்காது. அந்த அளவுக்கு கடுமையாக இருந்தது.

3. 1982 லெபனான் படையெடுப்பு

பாலஸ்தீன விடுதலை அமைப்பை (PLO) குறிவைத்து, 1982ம் ஆண்டு, லெபனான் மீது இஸ்ரேல் படையெடுத்தது. இந்த படையெடுப்பின் போது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவியை வழங்கியது. போரின் விளைவாக 17,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்று லெபனானில் அரசியல் உறுதியற்ற தன்மை நிலவுவதற்கு இஸ்ரேல்தான் காரணம். ஹிஸ்புல்லா போன்ற குழுக்களின் எழுச்சிக்கும் இஸ்ரேல் படையெடுப்பு காரணமாக அமைந்தது.

அந்த சமயத்தில் இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று ஐநாவில் தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த தீர்மானத்தை தோல்வியடைய செய்தது.

4. இஸ்ரேலின் அணு ஆயுதமும், அமெரிக்காவின் மௌனமும்

இஸ்ரேல் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. "இல்லீங்க, எங்ககிட்ட அப்படி ஏதும் இல்லை" என்று இஸ்ரேலும் இதுநாள் வரை வெளிப்படையாக மறுக்கவும் இல்லை. அமெரிக்காவும் இஸ்ரேலின் அணுசக்தித் திட்டத்தைப் பற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. மட்டுமல்லாது அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NPT-இல்) கையெழுத்திடுமாறு இஸ்ரேலை கட்டாயப்படுத்தவும் இல்லை.

ஆக மத்திய கிழக்கில் இப்போதுவரை பஞ்சாயத்தை ஏற்படுத்தி வருவது இஸ்ரேல்தான். இதற்கு அமெரிக்காவும் சப்போர்ட். ஆனால், இன்று ஈரானை நோக்கி விரலை நீட்டுகிறது மேற்கு நாடுகள். "கிச்சான்னாலே இளிச்ச வாயன்தானா?"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+