Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு ஆடுகள்.. எலான் - ட்ரம்ப் சண்டையால் பேராபத்து! விண்வெளி போர்?

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரை இணை பிரியா நண்பர்களாக இருந்த டொனால்ட் ட்ரம்ப்பும் எலான் மஸ்க்கும் தற்போது நேருக்கு நேர் எதிரியாக மாறியிருக்கின்றனர். இதனால் பொருளாதார ரீதியாக எலானுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் எலான் மஸ்க் நிறுவனத்திற்கான அரசு ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டால், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலத்தை தரமாட்டேன் என மிரட்டி இருக்கிறார் எலான்.

ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா உள்ளிட்ட உலகளாவிய பெரும் நிறுவனங்களில் உரிமையாளரான எலான் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ட்விட்டரை வாங்கி எக்ஸ் என பெயர் மாற்றினார். அதற்கு முன்பு ட்விட்டர், டிரம்பின் அக்கவுண்ட்டை நீக்கி இருந்த நிலையில், அவரது அக்கவுண்ட்டை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

அப்போது இருந்து இருவரும் நண்பர்கள் ஆயினர். தொடர்ந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் எலான் மஸ்க் டொனால்ட் ட்ரம்புக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். அவரது எக்ஸ் நிறுவனம் மூலம் பெறும் பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது. மேலும் பல கோடிக்கணக்கான ரூபாய்களை எல்லாம் டொனால்ட் ட்ரம்புக்கு செலவு செய்ததாகவும் கூறப்பட்டது.

donald Trump Elon Musk NASA

நன்றாக சென்று கொண்டிருந்த அவர்களது நட்பில் தற்போது விரிசல் விழுந்து இருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு வழங்கும் பல்லாயிரம் கோடி ரூபாய் மானியத்தை நிறுத்தினால் அரசுக்கு செலவு குறையும் என கூறினார். அமெரிக்காவின் நிர்வாக செலவை குறைப்பதற்காகவும் திறனை மேம்படுத்தும் சிறப்பு குழுவான டாட்ஜின் தலைவராக எலான் மஸ்க் இருந்தார்.

அவருக்கும் டிரம்பின் அமைச்சரவையில் இருப்பவர்களுக்கும் உரசல் ஏற்பட்ட நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் திடீரென அவரை அந்த பதவியில் இருந்து தூக்கி அடித்தார். இதற்கிடையே அமெரிக்காவின் செனட் சபையில் வரி மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மெக்சிகோ எல்லையில் சுவர் கட்டும் திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது. இந்த மசோதாவை எலான் மஸ்க் கடுமையான விமர்சித்தார். இதனால் கோபமடைந்த ட்ரம்ப், எலானுக்கு வழங்கப்படும் அரசு ஒப்பந்தங்கள் மானியங்கள் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

ஒப்பந்தங்களை ரத்து செய்தால் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் டிராகன் விண்கலத்தை பயன்பாட்டில் இருந்து நீக்கும் எனக் கூறியிருக்கிறார். தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வீரர்களை அனுப்புவதற்கு டிராகன் விண்கலம் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி இருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டவரை டிராகன் விண்கலம் தான் அழைத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கிட்டத்தட்ட 40,000 கோடி ரூபாய் ஒப்பந்தத்தின் கீழ் டிராகன் விண்கலத்தை நாசா பயன்படுத்தி வரும் நிலையில் இந்த மிரட்டலால் சர்வதேச விண்வெளி திட்டம் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் எக்ஸ் பயனர் ஒருவர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் டிராகன் விண்கலத்தை நிறுத்த மாட்டோம் என எலான் பதில் அளித்து இருக்கிறார்.

தற்போதைய சூழலில் மஸ்கின், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் டிராகன் ஒப்பந்தம் மட்டுமல்லாது நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்களை இறக்கும் ஸ்டார்ஷிசிப் விண்கலங்கத்துக்கான ஒப்பந்தம், சர்வதேச விண்வெளி நிலையம் பயன்படாத நிலைக்கு வரும்போது அதனை சுற்றுப்பாதையில் இருந்து அகற்றும் ஒப்பந்தம் ஆகியவற்றையும் மேற்கொண்டுள்ளது.

ஒருவேளை டிராகன் விண்கல சேவையை நிறுத்தினால் ரஷ்யாவின் சூயஸ் விண்கலத்தின் உதவியை நாட வேண்டியிருக்கும். அதில் ஒரே சமயத்தில் மூன்று பேர் மட்டுமே விண்ணுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மோதல் காரணமாக எலான் நிறுவன பங்குகள் கடுமையாக சரிந்தது குறிப்பாக டெஸ்லாவின் மின்சார கார் நிறுவனத்தின் பங்குகள் கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அவரது சொத்து மதிப்பு 2.80 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவுக்கு சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+