தைவான் விஷயத்தில் சின்ன தப்பு நடந்தா கூட.. அமெரிக்காவுடன் போர் கன்பார்ம்! டிரம்புக்கு சீனா வார்னிங்!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: அமெரிக்க அதிபர் டிரம்ப், 2 நாட்கள் பயணமாக சீனாவுக்கு வந்திருக்கிறார். அவரை வரவேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங், தைவான் விவகாரம் குறித்து வார்னிங் கொடுத்திருக்கிறார். சீனா மண்ணில் வைத்து டிரம்ப்புக்கு வார்னிங் கொடுக்கப்பட்டிருப்பது சர்வதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தைவான் என்பது சீனாவுக்கு பக்கத்தில் இருக்கும் குட்டி தீவு. அதை தனி நாடாக அங்குள்ள ஆட்சியாளர்கள் அறிவித்திருக்கின்றனர். ஆனால், இதை சீன அரசு ஏற்கவில்லை. எனவே இந்த விவகாரத்தை பயன்படுத்தி சீனாவை சீண்ட வேண்டும் என அமெரிக்கா தைவான் விஷயத்தில் மூக்கை நுழைத்திருக்கிறது. தைவானுக்கு ஆயுதம் சப்ளை குறித்து அமெரிக்கா தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டிருக்கிறது.

Trump

தைவான் விவகாரம்

நிலைமை இப்படி இருக்கையில்தான், டிரம்புக்கு சீன அதிபர் வார்னிங் கொடுத்திருக்கிறார். சீன அதிபர் ஷி ஜின்பிங், ட்ரம்ப்புடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தைவான் குறித்த தனது நிலைப்பாட்டை மிகத் தெளிவாகவும் கடுமையாகவும் பதிவு செய்துள்ளார்.

தைவான் விவகாரம் சரியாகக் கையாளப்படாவிட்டால், அமெரிக்காவும் சீனாவும் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் நிலை உருவாகும். இது ஒட்டுமொத்த உறவையும் பேராபத்தில் தள்ளும், என்று அவர் எச்சரித்துள்ளார். சீனா-அமெரிக்கா இடையே இருக்கும் அனைத்துப் பிரச்சனைகளிலும் தைய்வான் விவகாரமே மிகவும் முக்கியமானது என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டுள்ளார்.

சீனாவின் ரூட்

அரசியல் ரீதியான மோதல்கள் ஒருபுறம் இருந்தாலும், வர்த்தகத் துறையில் அமெரிக்காவிற்குச் சாதகமான ஒரு முடிவை சீனா எடுத்துள்ளது. கடந்த சில காலங்களாக காலாவதியான உரிமங்கள் காரணமாக, அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வது கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது நூற்றுக்கணக்கான அமெரிக்க மாட்டிறைச்சி ஆலைகளுக்கு ஏற்றுமதி உரிமங்களைச் சீனா புதுப்பித்துள்ளது.

வர்த்தக வளர்ச்சி

கடந்த 2024-ஆம் ஆண்டை விட ஏற்றுமதி அளவு 48% மற்றும் மதிப்பு 69% குறைந்திருந்தது. இந்த புதிய அனுமதி மூலம் அமெரிக்காவின் விவசாய மற்றும் இறைச்சித் துறை பெரும் புத்துயிர் பெறும்.

இந்த 2026-ஆம் ஆண்டு இரு நாடுகளின் உறவிலும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் ஆண்டாக இருக்கும் என ஷி ஜின்பிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சீனாவில் தமக்குக் கிடைத்த சிறப்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவித்த ட்ரம்ப், இந்தப் பேச்சுவார்த்தை உலக அரசியலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

சீனா-அமெரிக்க உறவு

என்னதான் தைவான் விஷயத்தில் அமெரிக்கா ரொம்பவும் சூடாக இருந்தாலும், வர்த்தகம் விவகாரத்தில் விட்டுக்கொடுத்துதான் போய் இருக்கிறது. இது சீனா, அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடிக்க விரும்பவில்லை என்பதை காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+