தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராகிறார் சாய் இங்-வென் !
தைபே: தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாய் இங் - வென் பதவியேற்க உள்ளார்.
சீனாவின் அண்டை நாடான தைவானில் தற்போது, தேசியக் கட்சி ஆட்சி செய்து வருகிறது. அக்கட்சியின் ஆட்சிக்காலம் முடிவடைய உள்ளதையொட்டி, அங்கு புதிய நாடாளுமன்றத்தையும், அதிபரையும் தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

அதிபர் தேர்தலில் களத்தில் நிற்கும் தேசிய கட்சியின் எரிக் சூ-வின் ஆதரவாளர்களும், ஜனநாயக முன்னேற்றக் கட்சி வேட்பாளர் சைங்-இன்(Tsai ing) ஆதரவாளர்களும் தலைநகர் தைபே உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 4 மணிக்கு நிறைவு பெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எதிர்க்கட்சியான ஜனநாயக முன்னேற்றக் கட்சியைச் சேர்ந்த சாய் இங்-வென் அதிக வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். ஆளுங்கட்சியின் வேட்பாளராக போட்டியிட்ட எரிக் சு தோல்வியடைந்தார்.
மேலும், தோல்வியை ஒப்புக்கொண்டு தனது கட்சி தலைமை பொறுப்பிலிருந்து விலகுவதாக எரிக் சு தெரிவித்துள்ளார். இதையடுத்து, தைவான் நாட்டின் முதல் பெண் அதிபராக சாய் இங்-வென் பதிவியேற்க உள்ளார்.
சீனாவுடனான உறவு குறித்த விவாதம் நடைபெற்று வந்த வேளையில் தைவானில் நடைபெற்ற தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. இதனால் தைவான் தேர்தலையும், வாக்குப்பதிவுக்குப் பிறகு நடைபெறப்போகும் நிகழ்வுகளையும் அண்டை நாடான சீனா உன்னிப்பாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications