துனிசியாவில் தொடங்கி அரபு நாடுகளை அலற இன்னமும் வைக்கும் அரபு வசந்தம்....
ஆஸ்லோ: அமைதிக்கான நோபல் பரிசை துன்சியாவின் தேசிய பேச்சுவார்த்தைக் குழு பெறுவதற்கு அடிப்படையாக இருந்த "அரபு வசந்தம்"தான் அரபு நாடுகளை ஆப்பிரிக்க நாடுகளையும் பதம் பார்த்து கொண்டிருக்கிறது.
துனிசியாவில் 2010ஆம் ஆண்டு ஆட்சியாளருக்கு எதிராக மல்லிகைப் புரட்சி என்ற பெரும் கிளர்ச்சி வெடித்தது. சுமார் 2 ஆண்டுகாலம் இந்த புரட்சி நீடித்து துனிசியாவில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்தியது.

அப்போது அமைதிவழியில் ஜனநாயக ஆட்சி மாற்றத்துக்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டதற்காகத்தான் தேசிய பேச்சுவார்த்தைக் குழுவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த கிளர்ச்சிதான் மத்திய கிழக்கு அரபு நாடுகளையும் வடக்கு ஆப்பிரிக்கா தேசங்களையும் 'அரபு வசந்தங்களாக' ஆட்டிப் படைத்தது.
எகிப்து, லிபியா, யேமனில் ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்தின. லிபியாவில் 42 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த கடாபி புரட்சியாளர்களால் பிடிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார்.
சிரியாவில் அப்போது தொடங்கிய உள்நாட்டு யுத்தம் 3வது உலக யுத்தத்தைப் போல விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இந்த அரபு வசந்தத்தின் தாக்குதலுக்கு அல்ஜீரியா, ஈராக், ஜோர்டான், குவைத், மொராக்கோ, சூடானும் தப்பவில்லை.
செளதி, ஓமன், மேற்கு சகாராவிலும் 'லைட்டாக' அரபு வசந்தம் எட்டிப் பார்த்து ஓய்ந்தது. இந்த அரபு வசந்தத்தின் ஆயுதமாக சமூக வலைதளங்கள்தான் பயன்படுத்தப்பட்டன.
உள்நாட்டு இளைஞர்களின் எழுச்சிக் குரலாக வெடித்த இந்த அரபு வசந்தத்தை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தங்களது ஆதாயத்துக்காக பயன்படுத்திக் கொண்டன. தாம் விரும்பிய நாடுகளில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவதற்கான கருவியாக இந்த அரபுவசந்தம் அமெரிக்காவுக்கு பேருதவியாக இருந்தது.
கிளர்ச்சி குழுக்களுக்கு ஆயுத உதவியையும் தார்மீக ஆதரவையும் அமெரிக்கா வழங்கியது. ஆனால் சிரியாவில் அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைக்கு இப்போது செக் வைத்திருக்கிறது ரஷ்யா. அமெரிக்கா ஆதரவு கிளர்ச்சிக் குழுவை வேட்டையாடி வருகிறது ரஷ்யா. அந்நாட்டுடன் ஈரானும் கை கோர்க்கிறது.
சிரியாவில் அரபு வசந்தமாக தொடங்கிய உள்நாட்டு யுத்தம் இப்போது உலக மகா யுத்தமாக விஸ்வரூபமெடுக்குமா? அல்லது அமெரிக்கா, ரஷ்யா இடையேயான மோதலால் ஏற்கெனவே பெரும்பகுதியை கபளீகரம் செய்திருக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் சிரியா வீழுமா? என்ற கேள்வியும் எழுந்து நிற்கிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications