தீயில் கருகி மாண்ட உயிர்கள்..துருக்கி நட்சத்திர விடுதி தீ விபத்து! 66ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை! சோகம்
இஸ்தான்புல்: துருக்கி நாட்டில் நட்சத்திர விடுதி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக தீ விபத்து பயத்தில் பலர் ஜன்னல் வழியாக கீழே குதித்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க துருக்கி நாட்டின் போலு மாகாணம் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவரும் பகுதியாக உள்ளது. அந்த மாகாணத்தின் கர்தல்காயா பகுதியில், தி கிராண்ட் தர்தால் ஸ்கை ரிசார்ட் என்ற சொகுசு விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குதான் இந்த கொடூர தீ விபத்து ஏற்பட்டு இருக்கிறது.

தற்போது துருக்கியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் திரண்டு இருக்கின்றனர். கிராண்ட் கார்தால் சொகுசு விடுதியில் ஏராளமான மக்கள் விடுமுறை காரணமாக தங்கள் குழந்தைகளுடன் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில் ஜனவரி 21ஆம் தேதி அந்த நட்சத்திர ஓட்டலில் சமையலறையில் அதிகாலை 3:30 மணியளவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. காற்றின் வேகம் காரணமாக மளமளவென பரவிய தீ மற்ற அறைகளுக்கும் பரவியுள்ளது. தொடர்ந்து காற்று வேகமாக வீசத் தொடங்கிய நிலையில் 12 மாடி கட்டிடத்தில் முழுமையாக தீ பரவியது. ஆனால் விடுதியில் இருந்த தீ விபத்து அலாரம் செயல்படவில்லை என கூறப்படுகிறது.
தீ முழுமையாக பரவிய பிறகு கடும் புகை காரணமாக அங்கிருந்தவர்களுக்கு தீ விபத்து ஏற்பட்டதே தெரிய வந்திருக்கிறது. தொடர்ந்து தீ மற்றும் கடும் புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் அலறி அடித்து ஓட தொடங்கினர். 12 மாடி கட்டிடத்தில் 230க்கும் மேற்பட்ட பயணிகள் தங்கி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் அச்சம் காரணமாக பலர் ஜன்னலில் இருந்து கீழே குதித்துள்ளனர், சிலர் பெட் ஷீட்டுகளை பயன்படுத்தி ஜன்னல் வழியாக கீழே இறங்க முயற்சித்துள்ளனர்.
இதற்கிடையே மூச்சு திணறல் மற்றும் தீ விபத்தில் சிக்கி 20 பேர் பலியான நிலையில், தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மேலும் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு தீ விபத்தில் சிக்கியவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கும் சிகிச்சை பலனின்றி 33 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 66 ஆக உயர்த்துள்ளது. பயம் காரணமாக ஜன்னல் வழியாக கீழே குதித்ததில் இருவர் உயிரிழந்த சோக சம்பவமும் நேரிட்டது.
கடுமையான புகை காரணமாக மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது வரை 51 பேர் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பலருக்கும் 60 சதவீதத்திற்கும் அதிகமான தீக்காயம் ஏற்பட்டு இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வரும் வரை அருகில் உள்ள விடுதிகளுக்கு தீ பரவுவதை கட்டுப்படுத்தும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் உள்ள விடுதிகள் தங்கி இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இது தேசத்திற்கு மிக வலி மிகுந்த தருணம் இது என துருக்கி நாட்டின் உள்துறை அமைச்சரான அலி எர்லிகாயா தெரிவித்துள்ளார்.
-
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
டெல்லியில் பயங்கரம்! முதலில் பேஸ்மென்ட்டில் வெளியேறிய கரும்புகை! அடுத்த சில நிமிடங்களில் 20 பேர் பலி -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications