பேசிட்டிருக்கும்போதே திடீரென "கழன்று" விழுந்ததால்.. சங்கோஜமடைந்த பெண் செய்தி வாசிப்பாளர்!
லைவ் ஷோவில் செய்தி வாசிப்பாளர் பல் திடீரென கழண்டு விழுந்துவிட்டது
கீவ், உக்ரேன்: டிவியில் நியூஸ் வாசித்து கொண்டே இருக்கும்போதுதான், பெண் செய்தியாளருக்கு அந்த எதிர்பாராத சம்பவம் நடந்துவிட்டது.. அதை எப்படி அவர் எதிர்கொண்டார் என்பதே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
பொதுவாக, டிவி நிருபர்கள், செய்தி வாசிப்பாளர்கள், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இவர்கள் தங்களது நேரடி ஒளிபரப்பின்போது, அடிக்கடி எதையாவது வித்தியாசமான அனுபவங்களை எதிர்கொள்வார்கள்.. சில சமயம் இன்ப அதிர்ச்சியும் ஏற்படும்.. சில சமயம் தர்மசங்கடமும் ஏற்படும்.
இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு கேரளாவிலும் ஒரு சம்பவம் நடந்தது.. மாத்ருபூமி டிவியின் தலைமை இணை ஆசிரியர் ஸ்ரீஜா ஷியாம் என்பவர், அன்றைய தினம் கேரள அரசின் ஊடக விருதுகளை அறிவித்து கொண்டிருந்தார்.

அந்த அறிவிப்பில் ஸ்ரீஜாவின் பெயரே வந்தது.. இதை பார்த்ததும் ஸ்ரீஜாவுக்கு ஸ்வீட் ஷாக்.. லைவ் ஓடி கொண்டிருக்கிறது.. தன் பெயரை இப்படி விருது வழங்குவதில் அறிவிக்கப்பட்டதும் , அவரால் எதுவுமே பேச முடியவில்லை.. ஆச்சரியப்பட்டார்.. கொஞ்சம் திணறினார். பிறகுதான் சுதாரித்துக்கொண்டு அந்த செய்தியை அவர் வாசித்தார்.
அதுபோல, உக்ரேன் நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மரிச்சா படல்கோ என்பவர் அங்குள்ள பிரபல சேனலில் நிகழ்ச்சி தொகுப்பாளராக வேலை பார்த்து வருகிறார்.. டிவியில் லைவ் செய்தி போய் கொண்டிருந்தது.. மரிச்சா அதை வாசித்து கொண்டே வந்தார்.. அப்போது அவரது பல் விழுந்து விட்டது.
திடீரென கழண்டு விழுந்த பல்லை பார்த்து மரிச்சா டென்ஷன் ஆகவில்லை.. பீதியாகவில்லை.. சிரிக்கவும் இல்லை.. அமைதியாக இருந்தார்.. கழண்டு விழுந்த பல்லை லாவகமாக கையில் பிடித்து கொண்டார்.. அதன்பிறகும் அமைதியாக செய்தி வாசித்து கொண்டே இருந்தார்.
வேறு யாராக இருந்தாலும், அந்த சூழலை அப்பட்டமாக காட்டி கொண்டிருப்பார்கள், ஆனால் மரிச்சா அந்த தர்மசங்கட சூழலை புத்திசாலித்தனமாக கையாண்டார்.. இதனை கவனித்த பலரும் மரிச்சாவை பாராட்டி வருகின்றனர்!
Recommended Video
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications