தாய்லாந்து ஓட்டலில் இரட்டை குண்டுவெடிப்பு: பெண் ஒருவர் பலி; 19 பேர் படுகாயம்
ஹாவ் ஹின் : தாய்லாந்து நாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். வெளிநாட்டினர் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் ஹாவ் ஹின் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்வது வழக்கம். இந்த பகுதி மன்னர் பூமிபோல் அதுல்யாதேவின் சொந்த வீடாக கருதப்படுகிறது.

இந்நிலையில் விடுதியின் பாருக்கு அருகே 50மீ தொலைவில் உள்ள பூச்செடிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் பலியானார். மேலும் 5 வெளிநாட்டினர் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டின் மூன்று மாகாணங்களில் அடிக்கடி சிறிய ரக குண்டுவெடிப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. ஆனால் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications