அடுத்தடுத்து 2 நிலநடுக்கம்.. அதிர வைத்த 1 மணி நேரம்.. ஜப்பானில் அதிகாலையில் பரபரப்பு!
இன்று அதிகாலை ஜப்பானில் மோசமான அளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது.
டோக்கியோ: இன்று அதிகாலை ஜப்பானில் மோசமான அளவில் அடுத்தடுத்து இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது.
ஜப்பான் உலகில் அதிகமாக நிலநடுக்கத்தால் பாதிப்பிற்கு உள்ளாகும் நாடுகளில் ஒன்றாகும். இந்தோனேசியாவில் ஏற்படும் நிலநடுக்கம் அங்கு எரிமலையை வெடிக்க வைக்கும். ஜப்பானில் ஏற்படும் நிலநடுக்கம் அங்கு சுனாமியை அடிக்கடி ஏற்படுத்துகிறது.

கடந்த வாரம் இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன்பின் இரண்டு வாரங்களுக்கு முன் பப்புவா நியூகினியாவில் மோசமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் ஜப்பானில் இன்று இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 6.30 மணிக்கு ஒரு நிலநடுக்கம் மற்றும் காலை 7.30 மணிக்கு இன்னொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் கியூஸு தீவில் உள்ள மியாசாகி நகரத்தில் இருந்து 24 கிலோ மீட்டர் கடலுக்கு ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் என்ன மாதிரியான பாதிப்பு ஏற்பட்டது என்று இன்னும் தகவல் வெளியாகவில்லை. உயிரிழப்பு குறித்தும் இன்னும் தகவல் வெளியாகவில்லை
ஆனால் அதிக அளவில் வீடுகள், நிறுவனங்கள் இருக்கும் பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுவரை இதனால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் முதல் நிலநடுக்கம் 5.6 ஆக பதிவாகி உள்ளது. இரண்டாவது நிலநடுக்கம் 6.3 ஆக பதிவாகி இருக்கிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications