முன் ஜென்மத்து காதலர்கள் என்ற நம்பிக்கை.. 6 வயது அண்ணனிற்கு தங்கையை திருமணம் செய்து வைத்த பெற்றோர்!
தாய்லாந்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டையர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
பேங்காக்: தாய்லாந்தில் ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு பெற்றோரே திருமணம் செய்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் பேங்காக் நகரை சேர்ந்த அமோரன்சேன் சன்ந்த்ரோன் - பஞ்சாரப்ரோன் தம்பதிக்கு கடந்த 2012ம் ஆண்டு ஒரே பிரசவத்தில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்தது.

தாய்லாந்தில் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் அதிகம். புத்த மத நம்பிக்கையின் படி ஒரு பெண்ணிற்கு இரண்டை குழந்தையாக ஆண் மற்றும் பெண் என வெவ்வேறு பாலினங்களைச் சேர்ந்த குழந்தைகள் பிறந்தால், அவர்கள் முன் ஜென்மத்தில் காதலர்களாக இருந்தவர்கள் எனக் கருதப்படுகிறது. முந்தைய ஜென்மத்தில் சேர முடியாமல் போனதால், அடுத்த ஜென்மத்தில் அவர்கள் ஒரே தாயின் கர்ப்பத்தில் ஒன்றாக சேர்ந்து பிறப்பதாக நம்பப்படுகிறது.
இந்த ஜென்மத்தில் அவர்களைச் சேர்த்து வைப்பது அவர்களது பழக்கமாக இருக்கிறது. இதன்மூலம் அவர்களது பூர்வ ஜென்மக் கடன் தீரும் என்பது அவர்களது நம்பிக்கை.
இதனால், அமோரன்சேன் மற்றும் பஞ்சாரப்ரோன் தம்பதி தங்களது குழந்தைகளுக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி, தற்போது ஆறு வயதாகும் அந்த இரட்டையர்களுக்கு கடந்த வாரம் அவர்களது நாட்டு வழக்கப்படி திருமணம் நடைபெற்றது. அதில், உறவினர்கள் நண்பர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த திருமணத்திற்காக மணமகன் சார்பாக மணமகளுக்கு 2 லட்சம் பாத் வரதட்சணையாக வழங்கப்பட்டது. இந்திய மதிப்பில் இது ரூ 4.30 லட்சம் ஆகும்.
6 வயதிலேயே இவர்களுக்கு திருமணம் செய்தது வைத்தது குறித்து அவர்களின் தந்தை கூறுகையில், “சிறு வயதில் திருமணம் செய்தால் தான் அவர்கள் எதிர்கால வாழ்வில் சந்தோஷமாகவும், சிறப்பாகவும் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்தக் குழந்தைத் திருமணம் தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications