இந்தோனேஷியாவில் மீண்டும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பீதியில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
இந்தோனேஷியாவின் சும்பா தீவில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் சும்பா தீவில் இன்று காலை மீண்டும் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தோனேஷியாவின் சும்பா தீவில் ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சும்பா தீவில் இன்று அதிகாலை மீண்டும் இரண்டு முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவானது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் உருண்டன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேஷியாவில் கடந்த 28ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக கடலையொட்டி அமைந்திருந்த குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன. சுனாமி தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications