அதிகாலையிலேயே குலுங்கிய பூமி.. ஆப்கானிஸ்தான் - மியான்மரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்.. மக்கள் பீதி
காபூல்: நம் அண்டை நாடுகளாக உள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மரில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. வீடுகள் குலுங்கியதால் அச்சமடைந்த பொதுமக்கள் தூக்கத்தில் இருந்து எழுந்து பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நம் நாட்டின் அண்டை நாடுகளாக ஆப்கானிஸ்தான் மற்றும் மியான்மர் உள்ளன. இந்த 2 நாடுகளும் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பட்டியலில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் அவ்வப்போது இங்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் இருநாடுகளிலும் இன்று அதிகாலையில் திடீரென்று அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.
அதன்படி ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலையில் 1.26 மணி மற்றும் அதிகாலை 2.11 மணிக்கு அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் வீடுகள் லேசாக குலுங்கி உள்ளது. வீடுகளில் தூங்கி கொண்டிருந்த மக்கள் கண்விழித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளனர். பாதுகாப்பு கருதி அவர்கள் பொதுவெளியில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கங்களை தேசிய நிலஅதிர்வு மையம் பதிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள முதல் எக்ஸ் பதிவில், ‛‛ஆப்கானிஸ்தானில் அதிகாலை 1.26 மணிக்கு பூமிக்கடியில் 190 கிலோமீட்டர் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 4.2 என்ற அளவில் பதிவாகி உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது எக்ஸ் பதிவில்,‛‛ஆப்கானிஸ்தானில் பூமிக்கடியில் 125 கிலோமீட்டர் ஆழத்தில் அதிகாலை 2.11 மணிக்கு நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.0 என்ற அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இன்னொரு அண்டை நாடான மியான்மரிலும் இன்று அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நாட்டை எடுத்து கொண்டால் அதிகாலை 3.26 மணிக்கு பூமிக்கடியில் 105 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 என்ற அளவில் பதிவாகி உள்ளதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக நேற்றைய தினமும் மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்று பிற்பகல் 3 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.8 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கடியில் 110 கிலோமீட்டரில் நிலை கொண்டிருந்தது. அதற்கு முன்பாக ஜூலை 17 ம் தேதி மதியம் 1.24 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 4.7 என்ற அளவில் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications