"ஹோமோ".. நடுங்க வைத்த கொடூரம்.. ஓரினச்சேர்க்கையில் 2 பேர்.. மனசாட்சியின்றி தூக்கில் தொங்கவிட்ட அரசு
: ஹோமோசெக்ஸில் ஈடுபட்ட 2 ஆண்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது
தெஹ்ரான்: ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 2 ஆண்களை, மனசாட்சியே இல்லாமல் தூக்கில் தொங்கவிட்டுவிட்டனர்.. இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது.
வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஓரினச்சேர்க்கை தொடர்பான செய்திகளும் அதிகரித்து வருகின்றன.. இந்த ஓரினச்சேர்க்கையை குற்றம் என்றும், குற்றமற்றது என்றும் இரு வேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகிறது.
அதனால் இவர்களை ஆதரிப்பவர்கள் ஒருபக்கம், எதிர்ப்பாளர்கள் மறுபுறமும் உள்ளனர்.. உலக அளவில், ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பல நாடுகள் ஓரினச்சேர்க்கையை ஆதரித்துக்கொண்டுதான் இருக்கின்றன.

கலாச்சார சீர்கேடு
ஓரினசேர்க்கையும் இயற்கையான ஒரு விஷயம்தான் என்றும் அங்கீகரிக்கப்படுகின்றன.. ஆனால், பல நாடுகளில் குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில், இதை ஒரு கலாச்சார சீர்கேடாகவே பார்க்கின்றனர்... சாதாரண குற்றம் என்றாலே கடுமையான தண்டனைகளை இஸ்லாமிய நாடுகள் கையில் எடுத்துவிடும் நிலையில், ஓரின சேர்க்கை என்றால் அவ்வளவுதான்.. தூக்கு தண்டனை வரை வந்து நின்றுவிட்டார்கள்.

உறவுக்காரர்கள்
இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்பு, புருனேவில் புதிதாக ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது.. அதன்படி, ஒருபால் உறவுக்காரர்கள் உறவு கொண்டாலோ, திருமணத்தை தாண்டி உறவு வைத்து கொண்டாலோ கல்லால் அடித்துக் கொல்லப்படும் என்ற கடுமையான இஸ்லாமிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.. இதற்கு அப்போதே சர்வதேச அளவில் கண்டனங்கள் எழுந்தன.. ஆனாலும் இந்த நாடுகள் தங்கள் போக்கை மாற்றி கொள்ளவில்லை.. தண்டனையை குறைத்து கொள்ளவில்லை.

கொந்தளிப்பு
அந்த வகையில், ஈரானிலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மத்தியகிழக்கு நாடுகளில் ஒன்றுதான் ஈரான். இந்த நாட்டிலும் ஓரினசேர்க்கை என்றாலே கொந்தளித்து விடுவார்கள்.. இவர்கள் மட்டுமல்ல, திருநங்கையர் உடனான உறவு, விபச்சாரம் இப்படி எல்லாமே அவர்களை பொறுத்தவரை பெரும் குற்றங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோருக்கு அந்தந்த அரசுகளும் மரண தண்டனையை அசால்ட்டாக தந்து வருகிறது.. அதன்படி ஓரினச்சேர்க்கையில் மெஹர்தாத் கரீம்பூர், பரித் முகமதி 2 ஆண்கள் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்..

தூக்கு தண்டனை
இந்த வழக்கு விசாரணையும் நடந்தது வந்தது.. பிறகு 2 பேருக்குமே மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. 2 பேருமே 6 வருடங்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்தனர்.. 6 வருட தண்டனை முடிந்த நிலையில், மராகேவில் உள்ள ஜெயிலில் 2 பேரையுமே தூக்கில் போட்டுவிட்டனர்... இந்த தகவலை மனித உரிமைகள் குழு தெரிவித்திருக்கிறது... இப்படித்தான் 2 வருடங்களுக்கு முன்பு, இதே குற்றச்சாட்டிற்காக, இதேபோல 2 ஆண்கள்.. இதே ஜெயிலில், பச்சாதாபமே இல்லாமல் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications