இந்திய பைலட் ஸ்மித் நெற்றியில் முத்தமிட்டு UAE இளவரசர் சொன்ன வார்த்தை.. ரொம்ப பெருமையா இருக்கு

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் - டெல்அவிவ் விமானத்தில் கத்துக்குத்து காயமடைந்தாலும் விமானம் கடத்தலை தடுத்து ஹீரோவான இந்திய பைலட் ஸ்மித் மச்சாரை ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர்சந்தித்து நலம் விசாரித்து நெற்றியில் முத்தமிட்டார் வாழ்த்து தெரிவித்தார்.

uae-crown-prince-meets-flydubai-indian-pilot-smit-machchhar-in-hospital-and-kiss-his-forehead

துபாய் - டெல்அவிவ் விமானத்தை கடத்தி அதில் பயணித்த 180 பேரையும் கொல்ல ஓமன் துணை விமானி ஹமிம் அல்ஹமாமி முயன்றார். இதற்காக இந்திய கேப்டனான பைலட் ஸ்மித் மச்சாரை அவர் கத்தி மற்றும் 'காக்பிட்' கோடரியால் வெட்டினார். இந்த சம்பவம் கடந்த30ம் தேதி நடந்தது.

ரத்த வெள்ளத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் காக்பிட் கதவை திறந்ததால் பயணிகள் சேர்ந்து ஓமன் துணை விமானியை சிறைபிடித்தனர். அதன்பிறகு விமானத்தில் பணி முடித்து டெல்அவிவ்விற்கு திரும்பி கொண்டிருந்த 2 விமானிகள் விமானத்தை இயக்கி சவுதி அரேபியாவின் தபுக் பத்திரமாக தரையிறக்கினர்.

இந்த சம்பத்தில் இந்திய பைலட் ஸ்மித் மச்சார் கை, தலையில் பலத்த காயமடைந்தார். சவுதி அரேபியாவில் முதலுதவி சிகிச்சை பெற்ற ஸ்மித் மச்சார் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் நலமாக உள்ளாார்.

இந்நிலையில் தான் இன்று மருத்துவமனைக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் இன்று சென்றார். பைலட் ஸ்மித் மச்சார் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

விரைவில் பூரண குணமடைய வாழ்த்தினார். அதுமட்டுமின்றி அவரது செயலை பாராட்டியதோடு தனது அன்பை காட்டும் வகையில் நெற்றியில் முத்தமிட்டார். இதுதொடர்பான போட்டோவை ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், ''எங்கள் தரப்பில் இருந்தும், எங்களின் நாட்டின் சார்பிலும் அவருக்கு (இந்திய பைலட் ஸ்மித் மச்சார்) முழுமையான பாராட்டுகளையும், அவரது செயலுக்கான அங்கீகாரமும் அளிக்கப்படுகிறது. அவர் எங்கள் நாடு மற்றும் எங்களின் டீமின் ஒரு பகுதியாக இருக்கிறார். கருணை, அமைதி மற்றும் வாழ்வு உள்ளிட்டவற்றை முன்னிறுத்தும் ஐக்கிய அரபு அமீரகங்களின் அடையாளமாக அவர் இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்'' என கூறியுள்ளார்.

முன்னதாக நேற்று ஸ்மித் மச்சார், பிரதமர் நரேந்திர மோடியிடம் வீடியோ காலில் பேசினார். அப்போது பிரதமர் மோடி அவரை பாராட்டியதோடு, விரைவாக குணமடைய வாழ்த்தினர். இந்த சமயத்தில் தனக்கு என்ன நடந்தது? என்பது பற்றி ஸ்மித் மச்சார், பிரதமர் மோடியிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+