லண்டன் பெண் பயணியிடம் ஓரல் செக்ஸுக்கு வற்புறுத்திய உபேர் டிரைவர்... டிஸ்மிஸ்!
லண்டன்: உபேர் டாக்சி டிரைவர்களின் குசும்பு உலகளாவியதாக மாறியுள்ளது. டெல்லியில் பாலியல் பலாத்காரத்தில் ஒரு டிரைவர் ஈடுபட்ட நிலையில் லண்டன் நகரில் ஒரு பெண் பணியிடம் ஓரல் செக்ஸுக்கு வற்புறுத்திய உபேர் டிரைவர் பணியை விட்டு நீக்கப்பட்டுள்ளார்.
இந்த டிரைவர்களின் செயலால் உலக அளவில் உபேர் டாக்சி நிறுவனத்தின் பெயர் தரை மட்ட அளவுக்கு இறங்கி வந்து கொண்டிருக்கிறது படு வேகமாக.

கடந்த மார்ச் மாதம் லண்டனைச் சேர்ந்த ஒரு பெண் உபேர் டாக்சியில் பயணித்துள்ளார். அப்போது அவரிடம் அந்த டாக்சி டிரைவர் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்று கூறி வற்புறுத்தினாராம்.
இதுகுறித்து அந்தப் பெண் தற்போது கூறுகையில், பயணத்திந் இறுதியில், அந்த நபர் என்னிடம் உங்களுக்கு ஓரல் செக்ஸ் பிடிக்குமா என்று கேட்டார். அதில் தான் வல்லவன் என்றும், தன்னிடம் பல பெண்கள் ஓரல் செக்ஸ் கேட்டு வற்புறுத்துவார்கள் என்றும் அவர் கூறினார். மேலும் நாம் இருவரும் ஓரல் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றும் வற்புறுத்தினார்.
பக்கத்தில் ஆள் அரவமே இல்லாத ஒரு தெரு இருப்பதாகவும், அங்கு போய் இதைச் செய்யலாம் என்றும், அவர் தொடர்ந்து பேசியபடி இருந்தார். அதுதான் வாழ்க்கையில் நான் சந்தித்த, கேட்ட மிகவும் அநாகரீகமான பேச்சாகும்.
அங்கிருந்து நான் வேகமாக போய் விட்டேன். பின்னர் உபேர் நிறுவனத்திடம் இதுகுறித்துப் புகார் செய்தேன். அந்த நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மேனேஜர் என்னைத் தொடர்பு கொண்டார். இந்த விவகராம் குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் இதுபோல நடக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
ஆனால் எனக்கு இந்தப் பதிலில் திருப்தி ஏற்படவில்ல. எனவே நான் நடந்ததை விளக்கி நிறுவனத்திற்கு விரிவான புகார் கடிதம் அனுப்பினேன். இப்போது இன்னொருவர் பேசினார். அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படுவதாகவும் அவர் கூறினார். மேலும் எனக்கு 31 டாலர் உபேர் தொகை தள்ளுபடியையும் அவர் அறிவித்தார். ஆனால் அந்த டிரைவர் மீதான நடவடிக்கை என்ன என்பதை உபேர் நிறுவனம் எனக்குத் தெரிவிக்கவே இல்லை என்று கூறியுள்ளார் அப்பெண்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு அந்த டிரைவரை உபேர் நிறுவனம் நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. அவர் தற்போது பணியில் இல்லையாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications