For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சந்திர கிரகணத்தின்போது ஏலியன்களின் நடமாட்டம்? பறக்கும் தட்டுகளில் பாஸ்ட் பயணம்... அதிர்ச்சி வீடியோ

சந்திர கிரகணத்தின்போது ஏலியன்கள் வேகமாக கடக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

Recommended Video

    சந்திரகிரகணத்தின் பொது ஏலியன் கடந்து சென்றதா ? | Oneindia Tamil

    வாஷிங்டன்: சந்திர கிரகணத்தின்போது வேற்று கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வேகமாக கடக்கும் காட்சிகள் வீடியோவில் பதிவாகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    152 ஆண்டுகளுக்கு பிறகு மூன்று அரிய நிகழ்வுகளுடன் கடந்த 31-ஆம் தேதி அபூர்வ சந்திர கிரகணம் தோன்றியது. இதனை வெறும் கண்களாலேயே மக்கள் காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

    அதையடுத்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சந்திர கிரகணத்தை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சந்திர கிரகணத்தை காண ஏராளமான மக்கள் அங்கு குவிந்து சந்திரனின் விளையாட்டை கண்டுமகிழ்ந்தனர்.

    ஒரு நிமிட வீடியோ

    ஒரு நிமிட வீடியோ

    பல மணி நேரம் நீடித்த இந்த அருமையான நிகழ்வை நாசா பிரத்யேக கேமரா மூலம் ஒரு நிமிட வீடியோவாக வெளியிட்டது. பொதுமக்களாகிய நாம் வெறும் சந்திர கிரணகத்தை மட்டுமே கண்டு மகிழ்ந்தோம். ஆனால் விஞ்ஞானிகளின் பார்வையோ வேறு.

    அரிதாக நடக்கும் சம்பவங்கள்

    அரிதாக நடக்கும் சம்பவங்கள்

    சந்திர கிரகணத்தின்போது ஏலியன்கள் நடமாட்டம் இருந்ததாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் உள்ள ஃக்ரிஃபித் வானியல் ஆய்வு மையத்தின் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

    யார் கடப்பது?

    யார் கடப்பது?

    அந்த வீடியோவில் சந்திரனை பூமி மறைக்கும் அற்புத காட்சிகள் நடந்து வரும் நிலையில் சந்திரனுக்கு இடது புறத்தில் ஒரு வெளிச்சமான மர்ம பொருள் யாரும் கணிக்க முடியாத வேகத்தில் கடக்கிறது. அந்த பொருள் என்னவென்று தெரியவில்லை.

    வேற்றுகிரகவாசிகள்

    வேற்றுகிரகவாசிகள்

    மனிதனால் தயாரிக்கப்பட்ட விண் பொருள் இவ்வளவு வேகத்தில் செல்ல வாய்ப்பே இல்லை என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே ஏலியன்களின் பறக்கும் தட்டுகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் இந்த வீடியோவை பார்க்கும் போது வலுத்துள்ளது.

    English summary
    Some Unidentified Flying Object passes in the sky when Lunar Eclipse happens on January 31st. Researchers suspects that that may be alien's flying object.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X