அப்பதான் சிரித்து பேசிகொண்டே வந்தார்.. திடீரென உடம்பை துளைத்த குண்டுகள்.. அமைச்சரின் மகள் பரிதாப பலி
அமைச்சரின் மகள் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்
கம்பாலா: அமைச்சருக்கு வைத்த குறியில் மகள் சிக்கி விட்டார்.. நடுவழியில் காரை மறித்து துப்பாக்கியால் சுட்டதில், உகாண்டா நாட்டு அமைச்சரின் மகள் பரிதாபமாக உயிரிழந்தார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று உகாண்டா.. இங்கு அதிபர் யோவேரி முசவேனி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது... இங்கு தொழில் மற்றும் போக்குவரத்து துறை இருந்து வருபவர் கட்டும்பா வாமலா... இவர் ஒரு முன்னாள் ராணுவ தளபதி.

இவருக்கு 64 வயதாகிறது.. அரசியலில் தீவிரமாக ஈடுபடும் நோக்கில், அதை ராஜினாமா செய்தவர்.. கடந்த 2019-ம் ஆண்டு அமைச்சர் பொறுப்பையும் ஏற்றவர்.. இந்நிலையில், அமைச்சர் கம்பாலாவில் உள்ள புறநகர் பகுதியில் தன்னுடைய மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். மகள் பெயர் நாந்தோங்கோ.
அப்பாவுடன் சிரித்து மகிழ்ந்து பேசி கொண்டே வந்தார்.. அப்போது திடீரென இவர்கள் கார் மீது சிலர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.. தொடர்ந்து சுட்டதில் அந்த காரை துளைத்து கொண்டு, துப்பாக்கி குண்டுகள் அப்பா, மகளுடன் சேர்த்து டிரைவர் மீதும் பாய்ந்தது.. இதில் மகளும், டிரைவரும் ரத்த வெள்ளத்தில் காருக்குள்ளேயே இறந்துவிட்டனர்..
ஆனால், அமைச்சர் கட்டும்பா வாமலா உடம்பெல்லாம் காயங்களுடன் உயிர் தப்பினார்.. இதையடுத்து, அங்கிருந்தோர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.. ஐசியூவில் தீவிரமான சிகிச்சையும் நடந்து வருகிறது..
அமைச்சருக்கு குறி வைத்து இந்த கொலைகள் நடந்துள்ளன.. அந்த மர்ம நபர்கள் யார் என்று தெரியவில்லை.. அமைச்சரை கொலை செய்ய நடந்த சதியில் அவரது இளம்வயது மகள் கொல்லப்பட்டது அந்நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications