சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு “பர்ஸ்ட் டிரிப்” - பெருமை தேடிக் கொண்ட இங்கிலாந்து வீரர்!
லண்டன்: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு முதன் முதலாக இங்கிலாந்து வீரர் ஒருவர் ராக்கெட் மூலமாக சென்று சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து சர்வதேச விண்வெளி ஆய்வகம் அமைத்து வருகின்றனர்.

அதன் கட்டுமான பணிக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை 3 வீரர்கள் சென்று திரும்புகின்றனர்.
முதன் முதலாக:
அந்த குழுவில் இதுவரை இங்கிலாந்து விண்வெளி வீரர்கள் இடம் பெற்றதில்லை. இந்த நிலையில் தற்போது முதன் முறையாக இங்கிலாந்து வீரர் ஒருவர் இடம் பெற்று அங்கு புறப்பட்டு சென்றுள்ளார்.
மனைவியும், மகன்களும்:
அவரது பெயர் டிம் பீக். 43 வயதான இவருக்கு ரெபேகா என்ற மனைவியும், தாமஸ், ஆலிவர் என்ற 2 மகன்களும் உள்ளனர்.
18 மாத பயிற்சி:
இதற்காக இவர் மேற்கு சூசெஸ்சில் உள்ள சிசெஸ்டர் நகரில் 18 மாதங்கள் பயிற்சி பெற்றுள்ளார். தற்போது இவருடன் ரஷிய வீரர் ஒருவரும், அமெரிக்க வீரர் ஒருவரும் விண்வெளி ஆய்வகம் சென்றுள்ளனர்.
வழியனுப்பி வைத்த குடும்பம்:
இவர்கள் 3 பேரும் நேற்று கஜகஸ்தானில் இருந்து சோயுஷ் ராக்கெட் மூலம் புறப்பட்டு சென்றனர். டிம் பீக்கை அவரது மனைவி மற்றும் மகன்கள் கையசைத்து கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications