ஆபரேஷன் சிந்தூரில் அசத்திய S-400.. ஆனால் இது ஓல்ட் டெக்னாலஜியாம்! சந்தேகம் கிளப்பும் பிரிட்டன்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை தடுத்ததில் ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்பு அமைப்புக்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஆனால், S-400 பழைய டெக்னாலஜி என்றும், உக்ரைன் போரில் இந்த S-400 சரியாக வேலை செய்யவில்லை என்றும் பிரிட்டனை சேர்ந்த ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட்டின் தரைப்படைப் போர் நிபுணர் ஜாக் வாட்லிங் கூறியிருக்கிறார்.

அவர் ரஷ்ய S-400 வான் பாதுகாப்பு அமைப்பின் போர் வலிமையை, இந்தியா அவசரமாக மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். 'தி இந்து' செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் அவர் இதை தெரிவித்திருக்கிறார்.

India Ukraine

S-400ன் வலிமை

பேட்டியில் அவர் கூறியதாவது, "S-400 ஒப்பந்தங்களை இரத்து செய்ய நான் பரிந்துரைக்கவில்லை. எனினும், உக்ரைனில் S-400இன் செயல்பாட்டு திருப்திகரமானதாக இல்லை. பலவீனங்களை வெளிப்படுத்தியுள்ளது. S-400 அமைப்பு கடந்த காலத்தில் இந்தியாவுக்குப் பயன்பட்டதை நான் ஒப்புக்கொள்கிறேன். குறிப்பாக, 2025ல் பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்வினையாகத் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சிந்துர் சமயத்தில், பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலுக்கு எதிராக இது வலிமையான தடுப்பாக இருந்தது.

இருப்பினும், இதற்கும் உக்ரைன் போருக்கும் இடையே நிறைய வேறுபாடு இருக்கிறது. S-400 நீண்ட தூரத்தில் இலக்குகளைத் தாக்க முடியும் என்றாலும், உக்ரைன் போரில் இது தனது பலவீனத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. உக்ரைன் போரில் போலி போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன" என்று கூறியுள்ளார்.

என்ன பிரச்சனை?

வாட்லிங் குறிப்பிடுவது, Decoys என்பதைதான். போலி விமானங்கள், பலூன்கள், ட்ரோன்கள் ஆகியவற்றை Decoys என்றுதான் சொல்வார்கள். ரஷ்யாவின் ரேடரில் இந்த போலியான போர் விமானங்கள் தென்படும். உடனடியாக S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஆக்டிவேட் ஆகி, அந்த இலக்கை தாக்க தொடங்கும். இந்த ஏவுகணைகள் ஒவ்வொன்றும் ரொம்பவே காஸ்ட்லியானது. சராசரியாக ஒவ்வொரு S-400 வான் பாதுகாப்பு அமைப்பு ஏவுகணையும் ரூ.31 வரை விலை கொண்டவை.

நம்பகமானதா?

போலியான இலக்குகளை இந்த ஏவுகணைகள் தாக்கும் நேரத்தில் உண்மையான ஏவுகணைகள் திடீரென உள்ளே புகுந்து தாக்கிவிடும். அந்த வகையில், S-400 வான் பாதுகாப்பு அமைப்பு நம்பகமானது கிடையாது என்று கூறியுள்ளார்.

ட்ரோன் தாக்குதல்

வாட்லிங் மேலும் கூறுகையில், "பிரச்சனை ரஷ்ய பொறியியலின் தரம் மட்டுமல்ல! போர்கள் நடத்தப்படும் விதத்தில் உள்ள அடிப்படை மாற்றத்தை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். S-400 பழைய விமானங்கள், ஏவுகணைகளுக்காக வடிவமைக்கப்பட்டது. ஆனால், மலிவான, அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களைக் கையாளும் திறன் இதற்கு கிடையாது. சமீபத்தில் கிரிமியாவில் நடந்த ட்ரோன் தாக்குதல்களை இதற்கு உதாரணமாக கூறலாம். இந்த ட்ரோன்கள் மிகவும் மலிவானவைதான். அவை S-400 பேட்டரிகளை தாக்கி அழித்தன.

இப்படி சொல்வதால், ரஷ்யாவின் S-400 வான் பாதுகாப்புக்கான ஒப்பந்தங்களை உடனே கிழித்து போட்டுவிட வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. நடைமுறை பிரச்சனையை இந்தியா புரிந்துக்கொள்ள வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்" என தெரிவித்திருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+